பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

கண்

இளங்குமரனார் தமிழ்வளம் 31 ஓ

பொன் : இவர் தளவாய் என்பதை எடுப்பான குதிரை, கோல் முதலியவற்றால் உணர்த்திய சிற்பி, அவர் அறிவு அமைதி தொண்டு முதலியவற்றை முகப் பொலிவிலும் கண்ணொளியிலும் நிறுத்தியுள்ளான். அடுத்த மேற்குத் தூணில் இருப்பவர் பிச்சைப் பெருமான்! : இதற்குமேல்பால் உள்ள தூணில் உள்ளவன் இடுப்பில் கச்சை கட்டியுள்ளான். இடுப்பிலும் கழுத்திலும் சில மணிமாலைகளை அணிந்துள்ளான். கழல் கட்டி யுள்ளான்; செருப்புப் போட்டுள்ளான். இவன் யார்? பொன் : இவனா? நன்றாகப் பார்! கண்ணப்பா! நன்றாகப் பார். வலக்கையில் அம்பும் தோளில் வில்லும் இருப்பதையும், ஒருகால் இலிங்கப்பீடத்தின்மேல் ருப்பதையும் கண்டாயா?

கண்

ஆம்! ஆம்! தன்னொப்பதோர் அன்பு இல்லாக்

கண்ணப்பன்.

பொன் : ஆம்! கண்ணப்பா! அவனே தான்!

கண்

பேரொளி மாலையும் மாலைதான்; காரிருள் மாலையும் மாலைதான்! அப்படி ஒப்புமை அந்தக் கண்ணப்பனுக்கும் இந்தக் கண்ணப்பனுக்கும்!

பொன் : எல்லாரும் கண்ணப்பனாகி விட்டால் அவனுக்கு மதிப்பு இருக்குமா? அப்படித்தான் நானும் பொன் னப்பனாக இருக்கிறேன்.

கண்

காளத்தி வேடன் கண்ணப்பனின் தலைக் கொண்டை இளஞ் சுரைக்காய் அளவுக்கு உள்ளது; எலும்பு வரிசை எளிதாகப் புலப்பட்டாலும், எழிலாகவே விளங்குகிறது.நெஞ்சின் விரிவும் படலமும் வயிற்றின் சுருக்கமும் உடல்வாகினை எடுத்துக் காட்டுகின்றன. பொன்: காலின் மூட்டும், தசைப் புடைப்பும் இவன் முறுக்கேறி உடல் நலத்தைக் காட்டவில்லையா!

கண்

மலை நிலத்தின் மாண்பு, அதன் தலைவனிடத்தும் விளங்குவது இயற்கை தானே!

பொன் : இது, முதல் கண்ணைத் தோண்டுதல். ஏனெனில்

காலைப் பீடத்தின்மேல் வைத்துள்ளான்! சிவகோ சரியார் மறைந்து நின்று பார்க்கிறார் என்பதைச்