பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

31

இளங்குமரனார் தமிழ்வளம் - 31

கொண்டாலும், கலைஞன் பறித்துக்கொள்ள விரும்பாமல், ஆடை அணிகளை வாரி வாரி இறைத் துள்ளான்.

கண்

கழுத்தணி

காது

என்ன! இடுப்பணி என்ன! வளையங்கள் எத்தனை! தொங்கல்கள், தோடுகள் வளையல்கள், தாம் எத்தனை எத்தனை! திருமுடியில் தான் எத்தனை வேலைப்பாடு!

பொன் : இவ்வளவு வேலைப்பாடு செய்தவன், தான் உணர்த்த விரும்பும் உணர்வு வேலைப்பாட்டைக் 'கோட்டை விடாமல்' எளிமையாக வெளிப்படுத்தியுள்ளான். மூக்குக்குக் கீழ் உதடுவரையுள்ள பள்ளம், கன்னத்தின் அமைப்பு, மகனைப் பார்க்கவும் முடியாமல், பாராமல் இருக்கவும் முடியாமல் இரண்டுங்கெட்ட நிலையில் நோக்கும் நோக்கு! இவற்றில் சிற்பி கவலைக்கோடுகளை அள்ளித் தெளித்துள்ளான்.

கண்

குழந்தையைக் கையில் எடுப்பவர் எப்படி நிற்க வேண்டும்? 'இப்படி நிற்க வேண்டும்!' எப்படி எடுக்க வேண்டும்? 'இப்படி எடுக்க வேண்டும்!' என்பதைத் தீட்டிக் காட்டியுள்ள சிற்பி ஒரு தாயாக இருந்து குழந்தையை எத்தனை முறை தூக்கித் தூக்கிப் பார்த்தானோ? எத்தனை தாய்மார்கள் குழந்தை களைத் தூக்கிக் கொண்டு நிற்பதைக், கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டு நின்றானே?

பொன் : இவள் ஒரு குறவஞ்சிக் கொடி. இவள் கொண்டை ஒரு பெருஞ் சுரைக்காயளவு உள்ளது. காதில் தோடு இல்லை. கல் பதித்த வட்டம் அணிந்துள்ளாள். பாசி மாலை போட்டுள்ளாள். மார்பிலே பச்சிளங் குழந்தையைப் போட்டுப் பால் குடிக்க விட்டுள்ளாள். பெருங் குடும்பி இவள்! ஓலைப் பெட்டியை இடுக்கிய தோள்மேல் ஒரு பிள்ளை. வலக்கைக் கீழே ஒரு பிள்ளை! இரண்டு பிள்ளைகளுமே உணவில் கருத்தாக உள்ளன.

கண்

கல்லில் வடித்த நார்ப்பெட்டி நார்ப்பெட்டியாகவே உள்ளது. அழகுப் பின்னல் அப்படியே விளங்குகிறது. வட்டக் குஞ்சத் தொங்கலும் பெட்டிக்கு அழகு செய்கிறது.