பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைக் கோயில் வரலாறு

101

பொன் : வலக்காலை முன்னே தூக்கி, இடக்காலைப் பின்னே தள்ளி இரு முழந்தாள்களையும் இடைமிகுத்து நிற்கும்

கண் :

வள் கோடுபோட்ட பாவாடை உடுத்துள்ளாள். இடுப்பும் வயிறும் இடைக்கச்சும் உழைப்பின் இயற்கை யழகை வெளிப்படுத்துகின்றன.

"இலகுநீ றணிந்து திலகமும் எழுதிக்

குலமணிப் பாசியும் குன்றியும் புனைந்து சலவைசேர் மருங்கில் சாத்திய கூடையும் வலதுகைப் பிடித்த மாத்திரைக் கோலும்”

உடைய குற்றாலக் குறவஞ்சியாகவே இவள் விளங்குகிறாள்.

பொன்: இவளுக்கு இணையானவனைப் பார். அடுத்த தூணில் நல்ல உயரமானவன்; ஆனால், இரு பங்கை ஒரு பங்காகக் குறுக்கியதுபோல் குறுகி நிற்கிறான்.

கண்

நெற்றிக் கட்டும் உச்சிக் குஞ்சமும் எடுப்பாக உள்ளன. ஐந்தாறு பனம்பழங்களை அடுக்கி வைத்ததுபோல் உள்ள கொண்டை இவற்றுக்கு அழகு செய்கின்றது. காதில் உருத்திராக்கத் தொங்கல்; கழுத்தில் மணி மாலையும், தாயத்தும்.

பொன் : திருக்கிவிட்ட மீசை; உருட்டி விழிக்கும் விழியில், ஒரு கோணற் பார்வை; வலக்கையில் ஒரு மான் கொம்பு; ஒரு குரங்கும் அதே கையில்; அதனைக் கட்டிய முப்புரிக் கயிறோ, அப்படியே அழகிய கயிற்றையும் தோற்க வைக்கும்.

கண்

குரங்கு, தன் கையால் அடி வயிற்றைப் பற்றி, மூக்கை நீட்டி, முகத்தை ஒரு பக்கம் திருப்பி 'நான் குரங்கு என்பது புரியவில்லையா?' எனக் கேட்கிறது!

பொன் : இவன் கால், கை, தசைப்பொலிவு இவற்றை விளக்க வேண்டியது இல்லை. இவன் இளைய ாய வீர பத்திரனாக விளங்குகிறான் தோற்றத்தில்!

கண்

இவன் கூனிக் குறுகிய நிலை, வீரபத்திரர் முன்னே ஒட்டுமா? "கண்ணிகுத்தி வேட்டியாடி, ஞாளிபோல் சுவடெடுத்துப் பூனைபோல் ஒளி போட்டு, நரிபோல் பம்மிக் கூளிபோல் தொடர்ந்தடிக்கும்" குறவஞ்சிச் சிங்கம் போலவே விளங்குகிறான்.