பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

31

இளங்குமரனார் தமிழ்வளம் -31

பொன் : இருக்கட்டும்; பார்த்தாயா?

கண்

இவள் தோளில் கிளியைப்

அது, இவ்விடத்துப் பெருமை! மலைமங்கை தோளில் அங்கே கிளி! கலைமங்கை தோளில் இங்கே கிளி! தேனினும் இனிய மழலை மொழி கேட்டு யானும் இவ்வாறு மொழிய இயலவில்லையே என்று கிளி நாணி அகன்று போகுமென இளங்கோவடிகள் கூறினான். இங்கே இவள் வீணையொலி கேட்கவோ, மழலைமொழி கேட்கவோ கிள்ளை தோளில் அமைதிப் பிள்ளையாக அமர்ந்துள்ளது.

பொன் : சிலர், தாம் இன்புறுவதற்காகப் பிறர்க்கு எவ்வளவு தொல்லையும் தரத்துணிவர். ஆனால் இக் கிளி வீணை இசைக்க இடையூறு செய்யாமல் இருந்து தானும் இன்பம் தந்து, இன்பம் தானும் பெறுகின்றது இஃது, இருக்குமிடத்தின் பெருமை! அடுத்த உள்கட்டுக்குப் போகலாம். இவர் திருமால். இவன் பேடி வடிவ அருச்சுனன்.

கண்

சரிதான்; தாடியும் மார்பும் பார்த்தால் பேடி என்பது விளங்கி விடுகின்றது. இது பாண்டவர் மறைந்து வாழ்ந்த காலத்து அருச்சுனன் நிலை!

பொன் : ஆம், இவனுக்கு எதிரே இருப்பவள் திரௌபதி. இவளுக்குத் தெற்குப் பக்கம் உள்ள ஒருவனைப் பார்! என்ன சிரிக்கிறாய்!

கண்

சிரியாமல் யாராவது இருக்க முடியுமா? உனக்குச் சிரிப்பு வரவில்லையா? சிரிக்கத்தக்க ஒருவனை இப்படிச் சித்திரித்துக் காட்டியிருக்கிறான் போலும் சிற்பி.

தனை

பொன்: ஆமாம். கீசகனை இழிவு படுத்துவதற்காக வடித்திருக்கலாம். இவன் தலைக்கட்டையும் சப்பளிந்த மூக்கையும் ஓட்டைப் பல்லையும் பார்! இவற்றை விஞ்சும் தொந்தியையும் பார்.

கண்

முண்டாசுக்கட்டும், தண்டாயுதமும் பொருத்தம் தான்! அதற்குமேல் பொருத்தம் கழுத்துப் பட்டியும் தொங்கலும்! இப்படியும் சிற்பிகள் நகைச்சுவையை

வெளிப்படுத்தியுள்ளனர்.