பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைக் கோயில் வரலாறு

107

பொன் : இக்கோயிலில் உள்ள மண்டபங்களில் மிகப் பெரியது இதுவே. இதன் நீளம் 75 மீட்டர், அகலம் 72 மீட்டர்; தூண்கள் 985; 15 தூண்கள் இருக்க வேண்டிய பரப்பில் உட்கோயில்கள்

கண்

உள்ளன.

ரண்டும்

அரியநாதர் இதனைக் கட்டி அழகு பார்த்தது அருமையே. அதற்கு மேலும் ஓர் அருமையாக இப்பொழுது இம் மண்டபத்தைக் காட்சிக் கூடமாக அமைக்கப் பெற்றதைக் குறிப்பிடலாம். சமயம், சிற்பம், ஓவியம் முதலிய துறைகளில் மிக அரிய செய்திகளை அறிந்துகொள்ள இக் காட்சிக்கூடம் உதவுகிறது என்பதை இதனை மேலோட்டமாகப் பார்த்தவர்கள் கூட அறிந்து கொள்வர். இத்தகைய ஏற்பாடு செய்த பெருமக்களும் நம் நெஞ்சில் நிற்கத் தக்கவர் ஆவர்.

பொன் : இக்கோயில் வரலாறு எழுதிய அறிஞர் திரு. பஞ்சநதம் பிள்ளை "காலாயிரமுடைய இம் மண்டபத்தைக் ம் காணக் கண்ணாயிரம் வேண்டும்" என்று கூறுவதை நாமும் ஏற்றுக் கொண்டு செல்வோம். இப்படியே இவ் வீர வசந்தராயர் மண்டபத்தின் முகப்பைப் பார்க்கலாம். வாயிலுக்கு வடக்கே ஒருவீரன் தன் தோளில் ஒருத்தியை வைத்துள்ளான். தெற்கே வீரபத்திரர் உள்ளார்; எண்கைச் சத்தி, ஐந்தலைப் பாம்பு தலைமேல் குடைபிடிக்க இருக்கிறாள்; இங்கே வளையல் பொம்மை முதலியவை விற்கும் கடைகள் உள்ளன. இனி மங்கையர்க்கரசி மண்டபத்திற்குச் செல்வோம்.