பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

இளங்குமரனார் தமிழ்வளம் - 31 31ஓ

யாதும் ஊரே யாவரும் கேளிர்!" என்பது இந்த மண்ணின் இயற்கை என்பதைத் தெளிவாக்குகிறது.

பொன் : கோபுரத்தின் மேலே ஏறலாம்! வா!

கண்

கண்

என்ன அகலப் படிகள்; குழந்தையும் கிழவரும் கூட எளிமையாக ஏறலாம் போல் உள்ளது.

பொன் : அடி அகலம் இருந்தால் தானே குறுகிக் குறுகி உயரப் போய் விண்ணளாவி எழுப்பி நிற்க வாய்க்கும். 'அடி அகலம் முடி உயரம்' என்பதற்கு அடையாளம். இந்த ஒன்பது நிலைக்கோபுரத்தின் முதல் தளம் இது. ஆயிரம் பேர்க்குப் பந்தி வைக்கலாம் இந்தத் தளத்தில்! : தளம் பெரிதுதான்! அதற்காக ஆயிரம் பேர்க்குப் பந்தி வைக்க வேண்டுமா? பந்தி போட்டுப் பந்தி போட்டுச் சோம்பேறிகளைப் பெருக்கிப் பாழான நாடு இது! இங்கேயும் சாப்பாட்டுப் பந்திதானா? 'உண்பதுவும் உறங்குவதுவும் அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே" என்று எத்தனை மடையர்கள் வாழ்கிறார்கள்?

66

பொன் : மடையர்களா?

கண்

ஆம்! மடையர் என்றால் சாப்பாடே குறியானவர் என்பது பொருள்! மடைப்பள்ளி, மடைத்தொழில் என்பவை என்ன நீ அறியாதவையா?

பொன் : சரி; இருக்கட்டும் மேலே செல்லலாம்!

கண்

அவ்வளவு அகலமான தளம் ஒன்பதாம் இடத்திற்கு வந்ததும் ஓராள் நடக்கும் அளவுக்குக் குறுகி விட்டதே. பொன் : இது கட்டடக் கலையின் நுண்மை மட்டுமன்று; அறிவின் இலக்கணமும் ஆண்டவன் இலக்கணமுமாம்.

கண் : என்ன சொல்கிறாய்?

பொன் : நீயே சொல்; 'மண்மாண் புனைபாவை' என்று திருவள்ளுவர் கூறுகிறாரே ஓரிடத்தில்; அதில் அறிவின் இலக்கணம் சொல்லவில்லையா?

கண்

'நுண்மாண் நுழைபுலம்'

என்று கூறி அறிவு

நுண்ணியது; அகன்றது; ஆழமானது; எனத் தெளி வாக்குகிறார். அதற்கு என்ன?