பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. புதுமண்டபம்

பொன் : சரி! நாம் புதுமண்டபத்திற்குப் போகலாம்!

கண் : புதுமண்டபமா?

பொன் : ஆம்! அது கட்டப் பெற்ற நாளில் அது புதுமண்டபம் தான். எத்தனை 'புதூர்' 'புத்தூர்கள்' பழைய ஊர் களாகிவிடவில்லை! அவற்றைப்போல் திருமலை மன்னர் காலத்துப் புதுமண்டபம் இன்றும் புது மண்டபமாகவே விளங்குகிறது.

கண் : இரண்டாயிரம் ஆண்டுகள் கழிந்தாலும் இளங்கோ வடிகள் இப்பொழுதும்

தாமே உள்ளார்? அப்படி.

ளங்கோவடிகளாகத்

பொன் : நாம் கீழச் சித்திரை வீதிக்கு வந்துள்ளோம். இதற்கு நுழைவாயில் கீழ கீழ ஆவணி வீதியில் உள்ளது. அவ்வழியாக வரலாம்; அடித்தளம் போட்ட அளவில் நின்று போன இது திருமலை மன்னரால் தொடங்கப் பெற்ற வேலையாம். இதன் அடித்தளத்தைப் பார்த்தாலே இங்குள்ள எந்தக் கோபுரத்திற்கும் இது பெரியது என்பது புலப்படுமே! கோபுரங்களில் எல்லாம் பெரியது என்னும் பெயர் விளங்க 'இராச கோபுரம்' எனப் பெயரிட்டுத் தொடங்கினார். அவர் இயற்கை எய்திய அளவில் இப்பணி நின்று போனது! : நிற்கும் தூண்களே கோபுரமாக விளங்குகின்றன. அவற்றை நிலைக்காலாக்கி ஒன்பது நிலைக்கோபுரம் எழுப்பியிருந்தால் இணையற்றதாகவே விளங்கி யிருக்கும்.

கண்

பொன் : திருமலை மன்னர் கலைத்திறமெல்லாம் இப் புதுமண்டபத்தில் களிநடம் புரிகின்றது எனலாம். இதன் வாயிலின் இருபக்கத் தூண்களையும் பார்.