பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்

மதுரைக் கோயில் வரலாறு

தூணில் குதிரையுடன் ஒரு வீரன் காட்சி வழங்கு கிறான். குதிரை முன்னங்கால்களை எடுத்துத் தூக்கி, பின்னங்கால்களை அழுத்தி ஊன்றிப் பாய்ச்சலில் நிற்கிறது. முன்னங் கால்களின் கீழே ஒரு வீரன் வாளுடன் நிற்கிறான். அவன் வாள் ஒரு புலியின் வாய்க்குள் செல்கிறது. அவ் வீரனுக்குக் கீழே இரண்டு பேர்கள் நிற்கின்றனர். அவர்களில் ஒருவன் வடபக்கம்; மற்றொருவன் தென்பக்கம்; இருவரும் வளைந்து நிற்கும் அழகு நன்றாக உள்ளது.

குதிரையின் மேலே இருப்பவன் வடக்குப் பார்த்து இருக்கிறான். அவனது தூக்கிய வலக்கையில் வேல் உள்ளது!

பொன் : வாயில் காட்சியிலேயே நாம் வழிமறந்து நின்று விட்டோமில்லையா? நம்மைத் தடுத்தவர் எவர்? கலை வல்லான் நம் உள்ளத்தை நிலைப்படுத்தி விட்டான். ஆனால், தென்பால் கண்ட இவ் வீரனை நிகர்க்கும் வடபால் வீரனும், அத் தூணின் மற்றைக் கலைகளும் அழிவுக்கு ஆட்பட்டுள்ளன! இவ் வாயில் தென்பக்கத் தூணின் பின் பக்கம் பார்! ஒரு கையில் மான்குட்டியையும் மற்றொரு கையில் புலியையும் வைத்துப் பெருமான் பாலுண்ணச் செய்கிறார். ஒரு மானை வேடுவர் கொன்றுவிட்டனர். அதன் இளமறி தாயற்ற துயரால் தவித்தது. புல்வாய்க்கு-மானுக்கு-ப் புலியைக் கொண்டு பாலூட்டித் தாய் நிலை அருளினார். இது பழைய திருவிளையாடல் கதைச் செய்தி. பெருமான் வலக்கையில் புல்வாய்; இடக்கையில் புலி.

கண்

புல்வாயை முதற்கண் எடுத்துக்கொண்டு, அதற்குப் புலியைப் பால் தரச்சொன்னமையால் அஃது

டக்கையில்! "ஆடுதுறையில் அடுபுலியும் புல்வாயும் நீரூட்டிய கொற்றவன்" என மூவருலாவில் படிக் கிறோம்! இங்கே புலி, புல்வாய்க்குப் பாலூட்டவே சிற்பத்தில் காண்கிறோம். அழிப்பதும் அழிவதும் இல்லா அருளுலக வேட்கை இது! 'வேட்டை யுலகம் இதன்மீது வேட்கை கொள்ளுமா?

பொன் : வடக்கு வாயில் தூணின் பின்பக்கம் பார். இங்கே இறைவனே பன்றிக்குட்டிகளுக்குப் பாலூட்டுகிறார்.

119