பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்

மதுரைக் கோயில் வரலாறு

123

ஈடு

தூணின் கிழக்குப் பக்கம் இறைவன் பிச்சைக் கலத்துடன் உள்ளார். அது நிரம்பி வழிகிறது. அதற்கு அடுத்த வடக்கு நடுத்தூணின் கிழக்குப் பக்கம் உமை யொருபாகர் விளங்குகிறார். இடக்கால் முட்டுமட்டும் முன்தள்ளி இடுப்புச் சற்றே இறங்கியுள்ளது. வலப்பால் இடுப்பு ஏறியுள்ளது. இதனை செய்தற்குக் கால் உள்ளே தள்ளி வைக்கப் பெற்றுள்ளது. வாயிலுக்குத் தென்பக்க முதல் தூணின் கிழக்குப்பக்கம் மும்மூர்த்தியர் உளர். இவர் இருதாள் நாற்கையர்; வலப்பால் திருமால்; இ டப்பால் நான்முகன்; முன்கை இரண்டிலும் மண்டையோடும், மாலையும் உள்ளன. பின் வலக்கையில் சக்கரமும், பின் இடக்கையில் கமண்டலமும் உள்ளன.

இம் மூர்த்திகளில் ஊடே இருக்கும் பெருமான் முகமும் விழியும், வலப்பால் இருக்கும் திருமால் முகமும் விழியும் ஒருயரத்தில் தோற்றம் தருகின்றன. நான்முகன் முகமும் விழியும் உயரத்தில் இறங்கிக் காட்சி தருகின்றன.

பொன் : அடுத்துள்ள நடுத்தூண் மீனாட்சியின் திருமணக் காட்சியாகும்! புகழ்வாய்ந்த இக் க் காட்சியைக் கம்பத்தடி மண்டபத்திலும் கண்டுள்ளோமே!

கண்

ஆனால் ஒரு வேறுபாடு. ஆங்கு அவர்கள் சிற்பியின் படைப்பாக இருந்து சிறந்தோங்குகின்றனர். இங்கே இந்த எழிற் சிற்பத்திலும் 'என் கைவண்ணத்தையும் காட்டுவேன்' என விளையாட்டுப் பிள்ளைத்தனமாக உதட்டிலும், விழிகளிலும் சிவப்பு கறுப்பு வண்ணங் களை அள்ளி எறிந்து அழகைக் கெடுத்துள்ளனர். சிற்பியின் நோக்கத்தைச் சீரழித்தது மட்டுமன்றி, இவர்கள் உள்ளார்ந்த உணர்வு வெளிப்பாடுகளையும் இவ் வேண்டாப் பூச்சால் கெடுத்துள்ளனர். இப்படி யெல்லாம் அறிவறியாச் செயல் செய்ய எவருக்குத் தாம் ஆர்வமோ? எவரின் தூண்டலோ? கொடுமை யாக இருக்கிறது! “நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தல் தவிர்க” என்னும் சங்கப் புலவர் உரையை இங்கும் சொல்லவே நேர்கின்றது! எங்கு எண்ணெய் முதலியன தடவிப் பளபளப்பாக வேண்டியது இல்லையோ அங்கும் தடவி அருவருப்புச்

வி