பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

இளங்குமரனார் தமிழ்வளம் - 31 31ஓ

செய்துள்ள அலங்கோலங்களும் கோயிலில் உள்ளன. மெய்யன்பர்களுக்காவது இதனைத் தடுத்து நிறுத்தும் நல்லெண்ணம் வரக் கூடாதா?

பொன் : மேற்கே நின்று இம் மண்டபத்தைப் பார். வாயிலுக்கு வடக்கே இரண்டு, தெற்கே இரண்டு தூண்கள்; இவற்றில் துள்ளிப்பாய்வதற்குக் காலைத் தூக்கிய குதிரைகள்.

கண்

இம் மண்டபத்தையே தேராக்கி இக் குதிரையூர்தி களைப் படைத்துள்ளான் இம் மண்டபப் படைப் பாளி! ஒவ்வொரு தூணும் கலைச் செல்வத்தின் நிலைப் பொருளேயாம்.

பொன் : தெற்குக் கடைசியில் உள்ள தூணில் கயிலையை இராவணன் எடுக்கும் காட்சி உள்ளது. வடக்குக் கடைசியில் இறைவன் வேடர் பெருமானாக விளங்கு கிறான். இது கரிக் குருவிக்கு உபதேசித்தது; இது கல்லானைக்குக் கரும்பு அருத்தியது. இவ் வாயில் முன்னேயும் கிழக்கு வாயில் முன்னேயும் உள்ள தூண்களின் உள்ளும் புறமும் அழகிய சிற்பங்கள் உள்ளன. ஒவ்வொரு தூணையும் பார்! இசை நிகழ்ச்சி; ஆடல் நிகழ்ச்சி; பத்திப் பெருக்கு; திருமால் அவதாரங்கள்; இறைவன் திருவிளையாடல்கள்; இப்படி வேலைப்பாடுகள். கிழக்கு வாயிலுக்குத் தெற்கே இருக்கும் மூத்த பிள்ளையாரையும், வடக்கே இருக்கும் இளைய பிள்ளையாரையும் வணங்கி, வாயில் காவலர் ஒப்புதல் பெற்றுக்கொண்டு உள் மண்டபத்துக்கு வந்துள்ளோம்.

கண்

எவ்வளவு பெரிய தூண்கள்; எவ்வளவு மிகுந்த உயரம்; உயரத் தூண்களின் மேல் உள் உத்திரக் கற்கள்; பாவு கற்கள்; இவற்றில் உள்ள வேலைப்பாடு; இருபால் தூண் வரிசைகளிலும் மதுரையை ஆட்சி புரிந்த நாயக்க மன்னர் திருவுருவங்கள்!

பொன் : புது மண்டபமே ஒரு காலப் பகுதியின் வரலாற்றுச் சுவடிதான். மேற்கே உள்ள கருங்கல் மண்டபம் வசந்த விழா மேடையாகும்!

கண்

இம் மண்டபத்தின் முகடும் அதன் பொலிவும் கம்பத்தடி மண்டபத்தின் உள் மண்டபமுகப்பை நினைவூட்டுகின்றன.