பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைத் திருக்கோயில்

கோயில் முகப்பு :

நூலுக்கு முன்னுரை உண்டு.

மீனாட்சி

சொக்கர்

கோயிலுக்கும் முன்னுரை உண்டு! மீனாட்சியம்மை கோயிலின் முகப்பே அழகிய முன்னுரையாகும்!

-

மூத்த பிள்ளையாரும் இளைய பிள்ளையாரும் முகங் கொடுத்திருக்க - அம்மையும் அப்பனும் திருக்கோலம் கொண் டிருக்க அவர்கள் திருக்கைகளை இணைத்துத் திருமால் நீர்வார்த்திருக்க அமைந்துள்ள திருமணக்காட்சி மீனாட்சி சொக்கர் கோயிலுக்கு முன்னுரையேயாம்.

அட்டசத்தி மண்டபம் :

அம்மை கோயில் வாயிலுள் நுழைந்ததும் இருப்பது 'அட்டசத்தி மண்டபம்' 'அட்டலக்குமி மண்டபம்' என்பதும் இதுவே. மண்டபத்தின் இருபக்கங்களிலும் நான்கு நான்கு தூண்களாக அமைந்துள்ள எட்டுத் தூண்களிலும் எட்டுச் சத்தியர் உள்ளனர்.

இடப்புறம் இருப்பவர் கௌமாரி, இரௌத்திரி, வைணவி, மகாலக்குமி என்பார். வலப்புறம் இருப்பவர் எக்ஞரூபிணி, சாமளை, மகேசுவரி, மனோன்மணி என்பார்.

அட்டசத்தி மண்டபத்தைக் கட்டியவர் இருவர் அவர் திருப்பணிக்கே தம்மை ஆளாக்கிக் கொண்ட வேந்தர் திருமலை நாயக்கர் பட்டத்துத் தேவியர் ஆகிய உருத்திரபதியம்மை தோளியம்மை என்பவர்.

மலயத்துவச பாண்டியன் மகளாக மீனாட்சி பிறப்பதும், அவள் முடிசூட்டிக் கொள்வதும், ஆட்சிநடத்துவதும், வீர உலாச் செல்வதும், இறைவனைக் காண்பதும், சோமசுந்தரர் ஆட்சி நடத்துவதும், உக்கிரபாண்டியர் பிறப்பு, முடிசூட்டு, ஆட்சி ஆகியவும் இம்மண்டபத்தில் வண்ண ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன.