பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

இளங்குமரனார் தமிழ்வளம் 31ஓ

இணைப்பு மண்டபம் :

அட்டசத்தி மண்டபத்தை அடுத்த பெரிய மண்டபம் மீனாட்சி நாயக்கர் மண்டபம் என்பது. இவ்விரண்டு மண்டபங்களும் இணைப்பாக இடையே ஒரு மண்டபம் உள்ளது. அதில் இறைவன் வேடனாகவும், இறைவி வேட்டு வச்சியாகவும் வந்து மாபாவி ஒருவனுக்கும் அருள் செய்த அழகிய சிற்பங்கள் உள்ளன. திருவிளையாடற் புராணத்தில் மாபாதகந் தீர்த்த படலம் என்பதில் உள்ள கதையை விளக்கும் சிற்பங்கள் இவை.

மீனாட்சி நாயக்கர் மண்டபம் :

மீனாட்சி நாயக்கர் என்பார் கட்டிய மண்டபம் மீனாட்சி நாயக்கர் மண்டபம். இவர் விசயரெங்க சொக்கநாத நாயக்கரின் தலைமையலுவலர்களுள் ஒருவர். இம்மண்டபம் கி. பி. 1707 இல் கட்டப்பட்டது. இதிலுள்ள தூண்கள் 110. பெருவிழாக்கள் எடுப்பதற்கென அமைக்கப்பட்ட இம்மண்டபத்தின் இருபாலும் பூக்கடைகளும் வளையல் பொம்மைக் கடைகளும் உள்ளன. முதலிப்பிள்ளை மண்டபம் :

மீனாட்சி மண்டபத்தில் இருந்து அடுத்துள்ள முதலிப் பிள்ளை மண்டபத்திற்குள் நுழைவதற்கரிய வாயிலின் நெட்டுயரத்திற்கு எடுப்பான திருவாச்சியுள்ளது. இதில் 1008 விளக்குகள் உள்ளன. இதனை அமைத்தவர் இந்திய விடுதலைப் போருக்குத் தம்மை ஈந்தனேர அந்த மருதுபாண்டியர்.

முதலிப்பிள்ளை மண்டபம் என்பது கடந்தை முதலியார் என்பவரால் கட்டப்பட்டது. இதனைக் கட்டிய ஆண்டு கி.பி. 1613.

மோகினியைக் கண்டு முனிவர்கள் மயங்கி நிற்கும் நிலை, பிச்சைப் பெருமானாம் இறைவனைக் கண்டு முனிவர் மனைவியர் மயங்கி நிற்கும் நிலை ஆகியவவை வைத்த கண்ணை எடுக்கவிடா வனப்புடன் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. இங்கே கடந்தை முதலியார் சிலையும் வணங்கும் கோலத்தில் அமைந்துள்ளது.

பொற்றாமரைக்குளம் :

முதலிப்பிள்ளை மண்டபத்தைத் தாண்டிச் சென்றால் காட்சியளிப்பது பொற்றாமரைக் குளம். இதன் பெயரை விளக்குவது போல் பொற்றாமரைப் பூவைத் திருப்பனந்தாள் திருமடத்தார் மலரச் செய்துள்ளனர்.

ள்