பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

இளங்குமரனார் தமிழ்வளம் -31 31

தலையராய் வணங்குபவர்; பாகைத் தலையுடன் வணங்குபவர்; திருமுடி திகழ வணங்குபவர்; வில்லேந்திய தோளராய் வணங்குபவர்; விம்மித உருவாய் வணங்குபவர்; விழுந்து வணங்குபவர்; மண்டியிட்ட கோலத்தில் வணங்குபவர்; ஆடும் அழகியாய்ப், பாடும் பாவையாய் வணங்குபவர்; குரங்கராய், காளையராய் வணங்குபவர் இப்படி வணக்க வகைகளை யெல்லாம் வடித்துக் காட்டும் சிற்பங்கள் உள்ளன.

கிளிக்கூட்டு மண்டபம் :

ஊஞ்சல் மண்டபத்தை அடுத்து வடபால் உள்ளது கிளிக்கூட்டு மண்டபம். கிளிக்கட்டு மண்டபம் என்பதும் இது. கிளியைக் கையில் ஏந்திய கிளி அங்கயற்கண்ணி. அதை நினைவு கூர்ந்து அமைக்கப்பட்ட மண்டபம் ஆகும். அதன் மேற்கூரையில் பிள்ளையார், முருகன், அம்மை ஆகியோரின் எண்ணற்ற வண்ண ஓவியங்கள் பளிச்சிடுகின்றன.

இம் மண்டபத்தின் நடை வழிக்கு இருபாலும் உள்ள தூண்களில் சிற்பங்கள் சிறந்து விளங்குகின்றன. தருமனும் அருச்சுனனும் வில்லாளிகளாக இருதூண்களில் எதிரெதிர் நிற்கின்றனர். அடுத்து நகுலன் சகாதேவன் நிற்கின்றனர். பலி பீடத்தின் முன்னர்த் தண்டேந்திய வீமனும் மனித விலங்கும் (புருசாமிருகம்) நிற்கின்றனர். சித்திவிநாயகர், குமரர் கோயிலுக்கு முன்னே சுக்ரீவன், வாலி, பாஞ்சாலி சிற்பங்கள் உள்ளன. மூர்த்தி நாயனார் தம் கை மூட்டையே சந்தனக் கட்டையாகக் கொண்டு அரைக்கப் பயன்படுத்தியது எனப்படும் கல்லும் உள்ளது. தருமன் முதலியவர்களின் சிற்பத்தூண்கள் கரிய மாணிக்கப் பெருமாள் கோயில் சிதைந்த போது அதிலிருந்து கொண்டு வந்த இம்மண்டபத்திற்குப் பயன்படுத்தப்பட்டது என்பர்.

-

அம்மை கோயில் திருச்சுற்று:

அம்மை திருக்கோயில் இரண்டு திருச்சுற்றுகளை யுடையது. இரண்டாம் திருச்சுற்றின் தென்கிழக்கு மூலையில் திருமலை மன்னர், வணங்கும் கோலத்தில் சிற்பமாக உள்ளார். தென்மேற்கு மூலையில் இரண்டு பிள்ளையார்கள் உளர். ஒருவர் உச்சிட்ட பிள்ளையார் ; மற்றொருவர் கூத்தப் பிள்ளையார். வடமேற்கு மூலையில் முத்துக்குமரர் கோயில் கொண்டுள்ளார். ஆறுகால் மண்டபம் :

அம்மை திருக்கோயில் வாயிலின் முன்னே ஆறுகால் மண்டபம் ஒன்று உள்ளது. அதில்தான் குமரகுருபரர் அமர்ந்து