பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

இளங்குமரனார் தமிழ்வளம் 31

அதன் நேரே தெற்கு நோக்கியிருப்பவர் 'முக்குறுணிப் பிள்ளை யார்' 'மற்பொரு திரள்புயமதயானை' என்பதற்கு ஏற்ற வடிவம் அது. பிள்ளையார் சதுர்த்திக்கு முக்குறுணி (ஏறத்தாழ 18 லிட்டர்) அரிசியை மாவாக்கி ஒன்றாகப் பிடித்த கொழுக் கட்டையைப் படைக்கும் வழக்கத்தால் முக்குறுணிப் பிள்ளையார் எனப் பெயர் வந்தது. இது மாரியம்மன் தெப்பக்குளம் தோண்டும் போது எடுக்கப்பட்டதென்றும், பின்னர் அங்குக் கொண்டு வந்து

வைக்கப்பட்டதென்றும் கூறுவர்.

கபாலி மதில் :

முக்குறுணிப் பிள்ளையார் இருக்கும் இடம் சொக்கர் கோயில் இரண்டாம் திருச்சுற்றாகும். இதன் மதிற்சுவர்க்குச் 'சுந்தரபாண்டியன் மதில்' என்பது பெயர். சுந்தரபாண்டியனால் எடுக்கப்பட்ட மதில் இது (கி.பி. 1216-1238). இதன் உள் மதில் 'கபாலி மதில்' எனப்படும். அது, 'கபாலி நீள்கடிம்மதில் கூடல் ஆ லவாயிலாய்' எனத் திருஞானசம்பந்தரால் பாடப்பட்ட பெருமையுடையது.

கம்பத்தடி மண்டபம் :

சொக்கர் வாயிலுக்கு நேரே இச்சுற்றில் உள்ளது கம்பத்தடி மண்டபம். இதற்கு நந்தி மண்டபம் என்னும் பெயரும் உண்டு.

மண்டபத்தின் நடுவே தங்கக் கொடிமரம் உள்ளது. நந்தி, பலிபீடம் ஆகியவையும் உள்ளன. கம்பம் என்பது கொடிமரம் ஆகும்.

நான்

இம்மண்டபத்தில் தெற்கே நான்கு தூண்களும் வடக்கே கு தூண்களும் ஆக எட்டுத் தூண்கள் உள்ளன. எட்ட முடியாக் கலைச் செல்வங்களை இவ்வெட்டுத் தூண்களிலும் காணலாம். கி. பி. 1564 இல் கிருட்டிண வீரப்பநாயக்கரால் கட்டப்பட்ட இம்மண்டபம்.

தென்பக்க முதல் தூணின் கிழக்குப்பக்கத்தில் அம்மை திருமணக்கோலச் சிற்பம் உள்ளது.

இத்தூணின்

வடபால் சோமசுந்தரரும் தென்பால் முப்புரம் எரித்தவரும் (திரபுராந்தகர்) உள்ளனர்.

இரண்டாம் தூணின் தென்பால் இறைவன் காலனை அழிக்கும் காட்சியும் கிழக்குப் பக்கத்தில் மார்க்கண்டேயனுக்கு அருள் செய்த காட்சியும் தூணின் வடபால் சுகாசனர் (அமைதிக் கோலர்) காட்சியும் உள்ளன.