பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைத் திருக்கோயில்

139

ஆகியவை உள்ளன. திருமகளும் உள்ளாள். இரத்தினசபை, வன்னியும் கிணறும் அழைத்த திருவிளையாடல் காட்சி, கல்லாலமரம், இலிங்கம் ஆகியவை அடுத்துள்ளன.

ஆறுகால் மண்டபம் :

சொக்கர் திருமுன் நுழைவாயிலில் ஓர் ஆறுகால் மண்டபம் உள்ளது. அங்கேதான் பரஞ்சோதிமுனிவர் இயற்றிய திருவிளையாடற்புராணம் அரங்கேற்றமாகியது. அம்மை திருமுன் அமைந்த ஆறுகால் மண்டபத்தில் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் அரங்கேற்றமாகியதை முன்னரே அறிந்துள்ளோம்.

சொக்கர்கோயில் :

சொக்கர் கோயிலுள் அறுபத்து மூவர் செப்புத் திருமேனி களும், உற்சவசித்தர், சந்திரசேகரர் செப்புத் திருமேனிகளும் உள்ளன. இவை விழாக்களில் உலாக் கொள்ளும் திருமேனிகள்.

இறைவர் சொக்கநாதர் சுந்தரரேசுவரர் என்பாரும் அவர். லிங்க வடிவில் அருமையாக அமைந்துள்ளார். அவரைத் திருவிளையாடல் பாடிய பரஞ்சோதியார் பாடிப் பாடித் தி ளைக்கிறார் :

‘சடைமறைத்துக் கதிர்மகுடம் தரித்துநறுங் கொன்றையந்தார் தணந்து வேப்பந்

தொடைமுடித்து விடநாகக் கலனகற்றி மாணிக்கச்

சுடர்ப்பூண் ஏந்தி

விடைநிறுத்திக் கயலெடுத்து வழுதிமரு மகனாகி

மீன நோக்கின்

மடவரலை மணந்துலக முழுதாண்ட சுந்தரனை வணக்கம் செய்வோம்'

என்கிறார்.நாமும் வாழ்த்தி வணங்குவோம். சோமசுந்தரருக்கு முன்னர் இடப்பக்கத்தில் வெள்ளியம்பலம் உள்ளது. முகடு மட்டும் வெள்ளியன்று! இறைவர் வடிவமும் வெள்ளியே! இறைவர் கால்மாறியாடும் கவினுருவில் திகழ்கின்றார் இங்கே. கருவறையும் விமானமும் :

இறைவர் கருவறையும் விமானமும் பழமைமிக்கவை. விமானம், திசைக்கு இரண்டாக எட்டு யானைகளும், திசைக்கு எட்டாக முப்பத்திரண்டு சிங்கங்களும், திசைக்குப் பதினாறாக