பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

இளங்குமரனார் தமிழ்வளம் - 31 31ஓ

அறுபத்து நான்கு பூதங்களும் தாங்கிக் கொண்டிருப்பது போன்ற அமைப்புடையது. இது இந்திரனால் செய்யப்பட்டது என்பது புராணக்கதை.

வசந்தராயர் மண்டபம் :

சொக்கர்கோயில் இரண்டாம் சுற்றைக் கடந்து வெளியே வரும் வழியில் உள்ளது பேச்சக்காள் மண்டபம். அடுத்து கிழக்கே உள்ளது வீரவசந்தராயர் மண்டபம். இதனைக் கட்டியவர் முத்துவீரப்ப நாயக்கர் என்பவர். இவர் திருமலை நாயக்கரின் தமையனார் (கி.பி.1611) இம்மண்டபத்தில் பலவகைக்

கடைகள் உள்ளன.

ஆயிரக்கால் மண்டபம் :

இங்கேதான் புகழ்மிக்க ஆயிரக்கால் மண்டபம் உள்ளது. தனைக் கட்டிய தளவாய் அரியநாத முதலியாரின் உருவம் வாயிலுக்கு மேற்கில் குதிரைமேல் அமர்ந்த நிலையில் உள்ளது. அடுத்துப் பிச்சைப்பெருமான், கண்ணப்பன் ஆகியோர் உருவங்களும் அங்கம் வெட்டிய திருவிளையாடற் காட்சியும் அருமையாய் அமைந்துள்ளன. மேல் கடைசியில் உள்ளது சைத்தூண்.

அடியும்முடியும் ஒன்றாய் இருக்க, இடையே பலவாய்ப் பிரிந்த அழகுத்தூண் அது. முப்பட்டை, நாற்பட்டை, உருளை முதலாகப் பல வடிவத்தூண்கள்; ஒவ்வொருபக்கத்திலும் நான்கு தூண்கள்! உள்ளே மூன்று தூண்கள்! எப்பக்கமும் ஏழுவரிசை! ஏழிசை எழுப்பும் எழில் தூண்கள் அவை. இத்தூணைப் போலவே கீழைக்கடைசியிலும் இசைத்தூண். வடக்கு ஆடி வீதியிலும் இசைத்தூண்கள்.

ஆயிரக்கால் மண்டபத்தின் வாயிலுக்குக் கிழக்கே அரிச்சந்திரன், சந்திரமதி, குறவஞ்சி, குறவன் ஆகியோர் சிற்பங்கள் ஒன்றை ஒன்று வெற்றி கொள்வதாய் அமைந்துள்ளன.

இம்மண்டபத்தின் நீளம் 75 மீட்டர். அகலம் 72 மீட்டர். தூண்கள் 985 உள்ளன. 15 தூண்கள் இருக்க வேண்டிய பரப்பில் உட்கோயில்கள் இரண்டு உள்ளன. இம் மண்டபம் இப்போது அருங்கலைக் காட்சிக் கூடமாகவும் விளங்குகின்றது.

மண்டபத்தின் உள்ளே கூத்தாடும் பிள்ளையார், குலசேகர பாண்டியர், திருமுருகன், நாகராசர், கலைமகள், திருமால், அருச்சுனன், திரெளபதி ஆகியோர் சிற்பங்கள்