பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைத் திருக்கோயில்

143

கிழக்குக் கோபுரம் 45.9 மீட்டர் உயரம். இது மாறவர்மன் சுந்தரபாண்டியனால் கட்டப்பட்டது. பெரிய கோபுரங்களுள் பழமையானது இதுவே.

உள்ளது

அம்மன் கோயிலுக்கு வரும் வழியில் சித்திரக்கோபுரம். இதனைக் கட்டியவர் தளவாய் அரியநாத முதலியாரின் மைந்தர் காளத்தி முதலியார். இதன் உயரம் 35.1

மீட்டர்.

அம்மன் கோயில் முன்னே உள்ளது வேம்பத்தூரார் கோபுரம். இதனைக் கட்டியவர் வேம்பத்தூர் ஆனந்தத் தாண்டவ நம்பி.

இதன் உயரம் 12 மீட்டர்.

அம்மன் கோயிலுக்குப் பின்னால் மேற்கு ஆடிவீதியில் உள்ள ஐந்து நிலைக் கோபுரம் 19.2 மீட்டர் உயரமானது.

மேலக் கோபுரத்திற்கு நேர் கிழக்கில் உள்ளதும் ஐந்து நிலைக் கோபுரமே. இதன் உயரம் 21.6 மீட்டர். கட்டியவர் மல்லப்பன்.

தனைக்

அம்மன் கோயிலுக்கும் சொக்கர் கோயிலுக்கும் ஊடே யுள்ளது நடுக்கட்டுக் கோபுரம். இதன் உயரம் 20.7 மீட்டர் சிராமலைச் செவ்வந்திமூர்த்தி செட்டியார் கட்டியது இது.

வடக்குக் கோபுரத்திற்குத் தெற்கே உள்ள ஐந்துநிலைக் கோபுரம் இடபக்குறியிட்ட கோபுரம் எனப்படும். இதனைச் செவ்வந்தி வேலப்பச் செட்டியார் கட்டினார். இதன் உயரம் 21.3 மீட்டர்.

கம்பத்தடி மண்டபத்திலிருந்து சொக்கர் கோயிலுக்குப் போகும் வாயிலில் உள்ளது குலசேகரபாண்டியன் கோபுரம். இது மூன்று நிலைகளையுடையது. உயரம் 12.3 மீட்டர்.

கம்பத்தடி மண்டபத்திலிருந்து வீரவசந்தராயர் மண்டபத் திற்குச் செல்லும் வழியில் உள்ள ஐந்து நிலைக்கோபுரம் வசுவப்பனால் கட்டப்பட்டது. இதன் உயரம் 19.8 மீட்டர்.

வெயிலொளியை வாங்கிப் பொன்னொளியாக வெளிவிடும் விமானங்கள் இரண்டு உள்ளன. ஒன்று அம்மை விமானம். மற்றொன்று அப்பர் விமானம்.

மொத்தத்தில் கோபுரங்கள் 17. விமானங்கள் 2. வாயில் வளைவுகளா? அவை வாயில் தோறும் உள்ளவை!