பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யு. சுப்பிரமணியன், ஐ.ஏ.எஸ்.

ஆணையர்,

இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை

அணிந்துரை

GFGSTOOT - 600 034 சென்னை

12-12-1979

தமிழ்நாடு கோயில்களால் மிகவும் புகழ்பெற்றது, விண்ணளாவி ஓங்கும் வியன்பெரும் கோபுரங்களை உடைய எண்ணற்ற கோயில்கள், நம் தமிழ் நாட்டிற்குப் பெரும் சிறப்பை விளைவிக்கின்றன. இக் கோயில்கள் பற்பலவற்றிலும், மிக்க சிறப்புடையனவாகத் திகழ்பவை ஒரு சிலவற்றுள் மதுரை அருள்மிகு மீனாட்சியம்மை கோயில் ஒன்றாகும். சமயம், வரலாறு, புகழ் பெற்றது.

திரு. புலவர் இரா. இளங்குமரன் அவர்களால் எழுதப் பெற்ற "மதுரைக் கோயில் வரலாறு" என்னும் இந்நூல் சிறப்பும் சுவையும் உடையதாக விளங்குகின்றது.

நண்பர்கள் இருவர் தம்முள் உரையாடிக் கொள்ளுதல் போல, இந் நூல் எழுதப்பெற்றுள்ளது. ஆதலால் இந் நூல் எளிமையாகவும், தெளிவாகவும், சுவையாகவும் அமைந்து திகழ்கின்றது. மதுரைக் கோயிலின்கண் உள்ள மண்டபங்களின் பெயர்கள் என்னென்ன? அம் மண்டபங்கள் கோயிலினுள் எங்கெங்கே இருக்கின்றன? அம் மண்டபங்களில் என்னென்ன காணத்தக்கனவாக உள்ளன? அம் மண்டபங்கள் யாரால், எந்தக் காலத்தில் கட்டப்பெற்றவை? அவற்றின் நீளம் அகலம் சிறப்பு முதலியவை எவை, எவை? என்பனவற்றை இந் நூல் தொகுத்து விளக்குகின்றது.

கோயிலின்கண் உள்ள சிற்பத் திருவுருவங்கள், இசைத் தூண்கள், தெய்வத் திருவுருவங்களின் தத்துவ நுட்பங்கள் முதலியனவும், இதன்கண் சுருக்கமாகவும், தெளிவாகவும் கூறப் பெற்றுள்ளன. இடையிடையே வரும் பாடல்கள் இந் நூலுக்கு இலக்கியச்சுவை ஊட்டுகின்றன.