பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிளையாடல் கதைகள்

151

இவ்வெள்ளியம்பலத்திலே நிகழ்ந்த வண்ணம் இருத்தல் வேண்டும்" என வேண்டிக் கொண்டனர். இறைவன் அவ்வாறே அருள் செய்தான்.

7. குண்டோதரனுக்கு அன்னம் வழங்கியது

ருமண நிகழ்ச்சிக்கு வந்த அனைவரும் விருந்துண்டனர். ஆனாலும் சோறும் கறிவகைகளும் மிக மீதமாகிக் கிடந்தன. இவற்றையெல்லாம் இனி என்ன செய்வோம்? என்ற கவலை தடாதகைக்கு உண்டாயிற்று. அதனால் இறைவனிடம் முறை

யிட்டாள்.

இறைவன் குண்டோதரன் (தாழிவயிறன்) என்பவனை நினைத்தான்.அவனுக்குக் கடும்பசி பற்றிக் கொண்டது.அப்பசியை ஆற்ற முடியாமல் ஓடிவந்து இறைவனிடம் தன் பசிக்கு உணவு வேண்டுமென வேண்டி நின்றான். இறைவன் தடாதகைப் பிராட்டியை நோக்க, அவள் குண்டோதரனை அழைத்துக் கொண்டுபோய் மலை மலைகளாகக் கிடந்த சோறு கறிகளுக்கு முன்னே விட்டாள். அவ்வளவையும் உண்ட பின்னரும் அவன் பசி தீர்ந்த பாடில்லை. "பசி வாட்டுகிறதே; என் செய்வேன்" என இறைவனிடம் வேண்டினான்.

8. அன்னக் குழியையும் வையையையும் அழைத்தது

குண்டோதரன் பசித்துயர் கேட்டு இறைவன் உருகினான். அன்னபூரணியை நினைத்தான். சோறு கறிகுழம்பு தயிர் ஆகியவை நிலத்தைக் கிழித்துக் கொண்டு பெருகின. அவற்றையெல்லாம் உண்டு பசி தீர்ந்தான். தீர்ந்ததும் அவனுக்கு நீர்வேட்கை உண்டாயிற்று. அதனால் குளம், கிணறு, ஊற்று ஆகிய நீர் நிலைகள் எல்லாவற்றுக்கும் ஓடி நீர் பருகியும் வேட்கை தணியவில்லை. இறைவன் கங்கையை நோக்கினான். கங்கை, வையையாறாகப் பெருக்கெடுத்தது. அப்பெருக்கை மண்டியிட்டு அமர்ந்து பருகினான் குண்டோதரன். அவன் நீர்வேட்கை தீர்ந்தது.

9. ஏழுகடல்களை அழைத்தது

தடாதகையின் அன்னை காஞ்சனமாலை என்பவள். அவளுக்குக் கடலாடவேண்டும் என்னும் விருப்பம் உண்டாயிற்று. அதனைத் தன் மகள் தடாதகையினிடம் உரைத்தாள். தடாதகை

றைவனிடம் தன் தாயின் விருப்பத்தைத் தெரிவித்தாள். இறைவன் அதனை நிறைவேற்றுபவனாய்க் “கடல்கள் ஏழையும்