பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

-

இளங்குமரனார் தமிழ்வளம் 31ஓ

இங்கே வரச்செய்கிறேன்" என்று கூறி வருவித்தான். அக்கடற் பெருக்கைக் கண்ட மக்கள் அஞ்சி நடுங்கினர்; அலறினர். உடனே அக்கடல்களின் நீரையெல்லாம் ஒரு குளத்துள் புகுமாறு செய்தான் இறைவன். அக்குளம் ஏழுகடல் தெப்பக்குளம் என்னும் பெயரால் சொல்லப்படுகிறது. அது சொக்கர் கோயிலுக்குக் கிழக்கில் புதுமண்டபத்திற்கு முன் உள்ளது. அத்தெருவுக்கு எழுகடல் தெரு என்பது பெயர்.

10. மலயத்துவசனை அழைத்தது

கடல்கள் மதுரைக்கு வந்ததை அறிந்த காஞ்சனமாலை அக்கடலில் நீராடச் சென்றாள். ஆங்கிருந்த முனிவர்களிடம் எவ்வாறு கடலாட வேண்டும்" என வினாவினாள். அவர்கள் கணவனுடைய கையையோ, மகனுடைய கையையோ, பசுக்கன்றின் வாலையோ பிடித்துக் கொண்டு கடலாட வேண்டும்' என்றனர்.

CC

காஞ்சன் மாலைக்கு மகன் இல்லை; தடாதகை ஒருத்தி தான் மகள். கணவன் மலையத்துவசனோ இறந்து விட்டான். அதனால் "கன்றின் வாலைப் பற்றிக் கொண்டா நான் கடலாட் வேண்டும்?" என வருந்தினாள். தடாதகையிடம் தன் நிலைமையைக் கூறி முறையிட்டாள். தடாதகை இறைவனை வேண்டினாள். இறைவன் விண்ணுலகில் இருந்து மலயத்துவசனை வருவித்துக் கடலாட வைத்தான். பின்னர் மலயத்துவசனை விண்ணுலகுக்குக் காஞ்சன மாலையுடன் அனுப்பி வைத்தான்.

11. உக்கிரபாண்டியன் திருப்பிறப்பு

பாண்டியர் மரபு அழியாமல் இருக்க வேண்டும் என்று தடாதகை விரும்பினாள். அதனால் இறைவனிடம் "பாண்டிய நாட்டு அரசராகி ஆட்சி செய்யும் தாங்கள் அம்மரபு அழியாமல் இருக்க உதவ வேண்டும்" என வேண்டினாள் இறைவன் அருள் புரிந்தான்.

தடாதகைப் பிராட்டி கருக் கொண்டாள். உரிய காலத்தில் ஓர் அழகிய மகனைப் பெற்றெடுத்தாள்.பகைவர்கள் கண்ட அளவானே அஞ்சத்தக்க ஆற்றல் வாய்ந்த அம்மகனுக்கு உக்கிர பாண்டியன் எனப் பெயரிட்டனர்.

உக்கிர பாண்டியன் தக்க வயது அடைந்ததும் வியாழனே சிரியனாக வந்து, கற்பிக்க வேண்டிய கலைகளை எல்லாம் கற்பித்தான். கலைகளில்தேர்ந்த உக்கிரபாண்டியன் திருமண வயதை அடைந்தான்.