பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிளையாடல் கதைகள்

20. எல்லாம் வல்ல சித்தரானது

மக்களுக்கு அருள்செய்ய விரும்பிய இறைவன் ஒரு சித்தர் வடிவில் தோன்றினான். சந்தி சதுக்கம் வீதி எங்கும் அனைவரும் வியக்கும் உருவில் திரிந்தான். கிழக்கில் இருப்பவன்போல் மேற்கேயும், மேற்கே இருப்பவன்போல் சிழக்கேயும் இருந்தான். எட்டத்தில் இருந்த மலையைக் கிட்டத்தில் வரவும், கிட்டத்தில் இருந்த மலையை எட்டத்தில் போகவும் செய்தான். பகலில் தோன்றுவனவற்றை இரவிலும், இரவில் தோன்றுவனவற்றைப் பகலிலும் தோன்றச் செய்தான். முதியனை இளையனாகவும் இளையனை முதியனாகவும், ஆணைப் பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் செய்தான். இவற்றைக் கண்ட ஊரவர் அரசன் அபிசேக பாண்டியனுக்கு உரைத்தனர். அவன் சித்தரை அழைத்து வருமாறு ஏவலரை விடுத்தான். ஏவலர்கள் வந்து சித்தரை அழைக்கவும் மறந்து போய் அவர் செயல்களைக் கண்டு கொண்டிருந்தனர். பின்னர்ப் பாண்டியன் அமைச்சர்களை விடுத்தான். அவர்கள் வந்து சித்தரை அழைக்க 'அரசனைக் கண்டு நமக்கு ஆவதென்ன?' என்று கூறி வரமறுத்துவிட்டார். அமைச்சர்கள் அரசனுக்குத் தெரிவிக்கச் சென்றனர்.

21. கல்லானைக்குக் கரும்பு அருத்தியது

சித்தரைக் கண்டு அழைக்க அவர் வரமறுத்ததை அமைச்சர்கள் கூறக்கேட்ட அளவில் அரசன் அஞ்சினான். “நானே செல்லத் தவறினேன்' என்னும் எண்ணமுடைய வனாகச் சித்திரை அணுகினான். "நீவிர் யாவர்? நும் ஊரும் நாடும் யாவை?' எனச் சித்தரை வினவினான். சித்தராக இருந்த இறைவன், “எமக்கு எவ்வூரும் எம் ஊரே; எந்நாடும் எம் நாடே; யாம் எல்லாம் வல்ல சித்தர்; காசியினின்று இவண் வந்தோம்; உன்னால் எனக்கு ஆகவேண்டுவதொன்றும் இல்லை" என்றான்.

க்

அப்பொழுது ஓர் உழவன் ஒரு பெரிய கரும்பைக் கொணர்ந்து அரசனுக்கு வழங்கினான். அரசன் "நீர் கல்யானை இக் கரும்பைத் தின்னுமாறு செய்தால் எல்லாம் வல்ல சித்தர் என்பதை ஏற்போம்" என்றான். சித்தர் அக்கல்யானையை நோக்க, அது மெய்யானையாய் நடையிட்டு வந்து கரும்பைத் தின்றதுடன் பாண்டியன் கழுத்தில் கிடந்த மாலையையும் பறித்தது. ஏவலர் சினந்து யானையை அடிக்கக் கையைத் தூக்கினர். சித்தர் 'நிற்க' என்ற அளவில் அவர்களின் கைகள் அசையாமல் நின்றுவிட்டன. பாண்டியன் சித்தர்

,

157