பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிளையாடல் கதைகள்

161

அப்பொழுது இறைவன் வேடனாகவும், இறைவி வேட்டுவச்சி யாகவும் உருக் கொண்டுவந்து அவன்முன் நின்றனர். அம்மைக்கு றைவன் அப் பாவியின் வரலாற்றை எடுத்துரைத் தான். எவ்வகையாலும் கழுவாயில்லாத இப்பாவிக்கு உய்தியும் உண்டோ" என்று அம்மை வினவ, "காப்பார் எவருமின்றி அழிவடைபவனைக் காப்பதே காப்பாகும்" என்று கூறினான் இறைவன். அவனுக்கும் அருள் செய்தான். மாபாவி தன் பாவம் தீர்ந்து இறைவனை வழிபட்டு அவன் திருவடியடைந்தான்.

27. அங்கம் வெட்டியது

குலோத்துங்க பாண்டியன் ஆட்சி செய்துவந்த நாளில் வேற்று நாட்டில் இருந்த முதியவனாகிய ஒரு வாளாசிரியன் மதுரைக்கு வந்து வாட்பயிற்சியளித்துக் கொண்டிருந்தான். அவனிடம் இளைஞர் பலர் வாட்பயிற்சி பெற்றனர். அவனிடம் பயிற்சி பெற்ற சித்தன் என்னும் மாணவன் அவ்வாசிரியனைப் பகைத்துத் தனியே ஒரு வாட்பயிற்சிக் களரி நடாத்தி வந்தான். அன்றியும் தன் ஆசிரியனின் இளமையான மனைவியைக் கவரவும் விரும்பி விரும்பினான். அவ்வம்மையார் தொழுது வேண்டினார்.

றைவனைத்

இறைவன் வாளாசிரியன் வடிவு கொண்டு வந்து சித்தனை வாட்போருக்கு அழைத்தான். முதிய வாளாசிரியன் அழைப்ப தாகக் கருதிய சித்தன் அதனை ஏற்றுக் கொண்டு வாட்போர்க் கோலம் தாங்கி ஊர்க்குப் புறத்தே வந்தான். இருவருக்கும் வாட்போர் கடுமையாக நடந்தது. கடைசியில் குருவடிவில் வந்த

றைவன் சித்தனின் மார்பையும் நாவையும் கையையும் கண்ணையும் தனித்தனியே தோண்டி எடுத்துத் தலையையும் கொய்து விட்டு மறைந்தான்.

வாளாசிரியனை வீட்டில் காணாத மாணவர் குருவின் மனைவியிடம் வந்து 'அவரை எங்கே' என்று கேட்க, அவன் கோயிலுக்கு வழிபடச் சென்ற செய்தியை உரைத்தாள். பின்னர் நிகழ்ந்ததை அறிந்த குருவும் அவன் மனைவியும் பிறரும், றைவன் திருவிளையாடலென அறிந்து வாழ்த்தினர்.

28. நாகம் எய்தது

அனந்தகுணபாண்டியன் என்பவன் ஆட்சியில் சிவனெறி மிகச்சிறந்து விளங்கியது. அதனால் சமணசமயத்தர் அவ்வேந்தன் மேல் வெறுப்புக் கொண்டனர். அவனை அழிப்பதற்காக ஒரு வேள்வி செய்தனர். அவ்வேள்வியில் ஒரு கொடிய அரக்கன்