பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிளையாடல் கதைகள்

169

வாங்குவான். திருவிடை மருதூர் வரை துரத்திச் செல்ல அங்கு உன் பாவத்தை நீக்குவோம்" என்ற விண்ணொலியால் இறைவன் விளம்பினான்.பாண்டியன் மகிழ்ந்து வழிபட்டுத் தன் இருக்கை

சேர்ந்தான்.

இறைவன் கூறியவாறே சோழன் படை கொண்டுவர, பாண்டியன் அவனைத் துரத்திச் சென்று திருவிடைமருதூர் அடைந்தான். அந்நிலையில் மருதூர் இறைவனை வணங்க எண்ணிய பாண்டியன் கிழக்கு வாயில் வழியே புகுந்தான். அது காறும் அவனைத் தொடர்ந்த கொலைப் பாவம் (பிரமகத்தி) கோயிலுக்குள் செல்ல முடியாமல் புறத்தே நின்றது. இறைவன் பாண்டியனிடம், 'நீ மேற்கு வாயில் வழியாகச் சென்றால் பாவந்தொடராது' என விண்ணொலியால் அறிவுறுத்தான். அவ்வாறே வெளிவந்த பாண்டியன் மேற்கு வாயிலுக்குத் திருப்பணிகள் பலசெய்து மதுரை சேர்ந்தான்.

பின்னர்ப் பாண்டியன் வரகுணனுக்குப் பெருமான் சிவலோகத்தில் அமர்ந்திருக்கும் காட்சியை அறியும் விருப்பம் பெருகியது. அதனை நிறைவு செய்தற்காக மதுரையிலேயே சிவலோகக் காட்சியைப் படைத்து, நந்தி தேவரைக் கொண்டு காட்டச் செய்தான் இறைவன்

41. விறகு விற்றது

வரகுண பாண்டியனின் ஆட்சிக் காலத்தில் வடநாட்டில் இருந்து ஏமநாதன் என்னும் இசைவல்லான் ஒருவன் வந்தான். அவன் இசைத்த இசையின் சிறப்பறிந்த பாண்டியன் அவனுக்குச் சிறப்புப்பல செய்து தங்கியிருக்க வளமனையும் தனியே வழங்கினான். அதனால் செருக்கடைந்த ஏமநாதன் "எம்மை வெல்வார் இங்கு எவரும் உளரோ?” என்றான். இதனை அறிந்த மன்னன் பாணபத்திரனை அழைத்து வருமாறு ஏவினான். வந்த பாணபத்திரனிடம் "ஏமநாதனை இசையில் வெல்வையோ? என வினவினான். “ஏவலாலும் இறைவன் அருளாலும் வெல்வேன்” என்றான் பாணபத்திரன். "நாளை வா' என விடுத்தான் வேந்தன்.

இல்லம் சென்ற பாணபத்திரன் ஏமநாதனின் மாணவர் தெருத்தோறும் இசைக்கும் இசையைக் கேட்டு அவனை நான் இசையால் எப்படி வெற்றிபெறக் கூடும் என அஞ்சி இறைவன் திருமுன் சென்று தன் நிலையை எடுத்துரைத்தான். இறைவன் அடியவற்கு அருளவெண்ணி விறகு விற்பான் போலக் கிழவடி வந்தாங்கி வீதி வீதியாக விலைகூறிக் கொண்டுவந்து ஏமநாதன்