பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

-

இளங்குமரனார் தமிழ்வளம் 31ஓ

அந்நாளில் மழை பெய்யாது ஒழிய நாரை அப் பொய்கையை விடுத்து வேறோரிடஞ் சேர்ந்தது. அங்கே ஒரு முனிவர் அடியார் கூட்டத்துடன் தங்கி இருந்தார். அவர்கள் தங்கியிருந்த இடத்தை அடுத்திருந்த நீர்நிலையில் மீன்கள் நிரம்ப இருந்தன. முனிவர்கள் நீராடும்போது அவர்கள் சடைமேல் துள்ளி மீன்கள் விளையாடும் பேற்றை நினைந்து அம்மீன்களைத் தின்னலாகாது என நோன்பு கொண்டிருந்தது. முனிவர் கூட்டத்தவர் நாளும் வழிபாடு செய்து நல்லுரை கூறியிருந்தனர். கூடற்புராணம் எனப்படும் திருவாலவாய் மான்மியம் படித்தனர். அதனைக் கேட்ட நாரை மதுரையின் சிறப்பை அறிந்து மதுரை நாயகனை வழிபட நினைந்து வந்தது. மதுரைப் பொற்றாமரைக் குளத்தில் நீராடி, பதினனைந்து நாள்கள் அங்கேயே தங்கி வழிபாடு செய்து வந்தது. முடிவில் பசிக்கு ஆற்றாமல் பொற்றாமரைக் குளத்தின் மீனைத் தின்னலாம் என எண்ணம் உண்டாகி, "ஐயோ! இப்படி எண்ணம் வந்ததே" என்று வருந்தி நின்றது. இறைவன் அதன் அன்புக்கு இரங்கி "உனக்கு யாது வேண்டும்?" என, "இப்பிறவி நீங்கி சிலவுலகு செல்லவேண்டும்" என்றது. மேலும் "நாரையும் பிற பறவைகளும் இத் தாமரைக்குளத்து மீனைத் தின்று பாவமுறாவண்ணம் இங்கு மீனே இல்லாதவாறு செய்தருள வேண்டும்" என்று வேண்டிக் கொண்டது. இறைவன் அவற்றை அருளினான்.

49. திருவாலவாயனாது

கீர்த்திபுடணன் என்பான் பாண்டிய நாட்டை ஆட்சி செய்த காலத்தில் பேரூழி ஒன்று உண்டாகியது. அப்பேரூழி யால் கோயிலும் காளமலை, ஆனைமலை, நாகமலை, பசுமலை, பன்றிமலை ஆகியனவுமே அழிவின்றி இருந்தன. வெள்ளநீர் வற்றிய பின்னர் இறைவன் உலகை முன்போல் படைத்தான். உயிர்களும் தோன்றின. பாண்டிய வேந்தனாக வங்கிய சேகரன் என்பான் தோன்றினான். அரசியல் தவறாமல் ஆட்சி நடத்தினான். மதுரையில் மக்கட் பெருக்கம் மிக்கது. பண்டை நகர எல்லை எதுவென அவன் அறியானாய், அதனை அறிவிக்குமாறு றைவனை வேண்டினான்.

பாண்டியன் வேண்டுதலை நிறைவேற்ற விரும்பிய இறைவன் தான் ஒரு சித்தர் வடிவு கொண்டு வந்தான். தன் கையில் கட்டியிருந்த பாம்பிற்கு. "இந்நகரெல்லை அளந்து காட்டு" என ஆணையிட்டான். அப்பாம்பு இறைவனே இந்நகர் என்பெயரால் விளங்க வேண்டும் என வேண்டிக் கொள்ள இறைவன் அவ்வாறே அருளினான்.