திருவிளையாடல் கதைகள்
175
பாம்பு கிழக்குத் திசை சென்று தன் வாலை நீட்டி வலம்பட வளைந்து வாலை வாயில் பற்றி விரிந்தது. பின்னர்ப் பெருமான் கையில் ஆழியாகியது. இறைவன் தன் வடிவு மறைந்தான். பாண்டியன் பழையபடி மதுரை நகரை அமைத்தான். பாம்பின் விருப்பப்படி மதுரை ஆலவாய் எனப்பட்டது.
50.சுந்தரப்பேர் அம்பெய்தது
வாங்கிய சேகரபாண்டியன் ஆட்சி செய்த நாளில் அவனொடு விக்கிரமச்சோழன் என்பான் போரிட விரும்பினான். அதனால் பாண்டிய நாட்டுப் பசுக்கூட்டத்தைத் திரட்டிச் சென்று போர்க்கு அடியிட்டான். சோழன் படைப் பெருக்கங்கண்டு அஞ்சிய பாண்டியன் கூடல் நாயகனைக் குறையிரந்து நின்றான். "நீ போர்க்குச் செல்க; யாம் உனக்குத் துணைப் படையாய் வந்து உதவுவோம்" என்றான் இறைவன் பாண்டியன் கவலை ஒழிந்து போருக்குச் சென்றான்.
போர் கிளர்ந்தது; நாற்படைகளும் மோதின; இரண்டும் சளைக்காத அளவில் ஒத்த நிலையில் போரிட்டுக் கொண்டி ருக்கும் போது, வடதேச மன்னர் படை சோழனுக்குத் துணையாக வந்து பாண்டியன் படையை முட்டியது. பாண்டியன் படை உடைந்தது; சோழன் வெற்றிச் சங்கு ஊதினான். அப்பொழுதில் வேடனொருவன் பாண்டியன் படைப்பகுதியில் இருந்து அம்பு ஏவ, அவ்வம்பு ஒன்று பத்து நூறு ஆயிரமாய்ச் சோழன் படையை அழித்தது, படையழிவு கண்ட சோழன் தன் படை மேல் பட்ட அம்பினை எடுத்துப் பார்க்க அதில் 'சுந்தரன்' பேர் பொறித் திருத்தல் கண்டு இறைவன் ஆடலென்று அஞ்சிச் சென்றான். பாண்டியன் வெற்றியோடு திரும்பி இறைவனுக்கு விழா வெடுத்து மகிழ்ந்தான்.
51. சங்கப் பலகை தந்தது
நான்முகன், வாணி சாவித்திரி காயத்திரி என்னும் மகளிருடன் காசியில் இருந்து கங்ககையில் நீராடச் சென்றான். செல்லும் வழியில் ஒரு விஞ்சை மகள் இசைத்த இசையைக் கேட்டு வாணி பொழுது தாழ்ந்து வந்தாள். முன்னே சென்ற மூவரும் நீராடினர். "யான் வருமுன் நீவீர் நீராடியது என்ன?" என்று வாணி சினந்தாள். நான்முகன், "நீ காலம் தாழ்ந்து வந்துவிட்டு எங்கள்மேல் குற்றம் சொல்கிறாய்; நீ மக்கட் பிறப்பு அடைந்து இப்பாவத்தை ஒழிப்பாயாக" எனச் சாவமிட்டான். வாணியாகிய கலைமகள் அஞ்சி நடுங்கி "பிறவித் துன்பம்