பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

இளங்குமரனார் தமிழ்வளம் 31

அறியா நின் மனைவியாகிய யான் அத்துயரடையவோ?" என்றாள். நான்முகன் "நீ நாற்பத்தெட்டுப் புலவர்களாகப் பிறப்பாய்! இறைவன் அகர எழுத்துப்போல் தலைவனாக அமர்வான். நீங்கள் சங்கப் புலவர்களாக விளங்கிப் புலமை நடத்துவீர்" என்றான்.

கலைமகளின் கலைகள் 57இல், அகரமும் கூட்டெழுத்து களும் நீங்கிய 48 எழுத்துகளும், 48 புலவர்களாய் விளங்கி மதுரை நோக்கி வந்தனர். இறைவனும் புலவனாக அவர்முன் சென்றான். அவர்களை அழைத்து வந்து கோயில் வழிபாடு செய்வித்துப் பாண்டியனிடம் அழைத்துச் சென்றான். அவன் கோயிலின் வட மேற்குப் பகுதியில் சங்கமண்டபம் ஒன்று அமைத்துத் தங்கியிருக்கச் செய்தான். முன்னரே புலவராக இருந்தவர்கள் புதிய புலவர் களோடு வாது செய்தனர். வேற்று நாட்டுப் புலவர்களும் வந்து வாதஞ் செய்தனர். அதனால் புலவர்கள் இறைவனையடைந்து எங்களோடு பலரும் வாதிட வருகின்றனர். புலமையை அளவிடத் தக்க சங்கப்பலகையொன்று அருளுக என வேண்டினர். இறைவன் அவ்வாறே சங்கப்பலகை அருளினான். அது இரண்டு சாண் நீளமுள்ளது. தக்க புலவர் வரின் இரண்டு சாண் நீண்டு இடந் தருவது. அப்பலகையில் இருந்து புலவர்கள் பாடிய பாடல்களுள் இவை சிறந்தன என்பதைக் காணுதலில் மாறுபாடு உண்டாகியது. அந்நிலையில் இறைவனே புலவனாக வந்து அவர்கள் மாறுபாடு நீக்கினான். நீவிரும் எம்மோடு வீற்றிருந்து வழி காட்டியருள வேண்டுமென அவர்கள் வேண்டிக் கொள்ள இறைவன் புலவர் தலைவனாக அமர்ந்து புலமை நடத்தினான்.

52. தருமிக்குப் பொற்கிழியளித்தது

செண்பகமாற பாண்டியன் என்பவன் தன் மனைவியுடன் தனித்திருந்தான். அப்பொழுது நறுமணம் ஒன்று வருதல் அறிந்தான். அந்த மணம் ஒருவகைப் புதுமணமாக இருக்கக் கண்டான். "இது பூவின் மணமுமன்று; காற்றிற்கும் மணமில்லை. எதன் மணம் இது," என்று திகைக்கும்போது, தேவியின் கூந்தல் மணமெனக் கண்டான். அது இயற்கையோ? செயற்கையோ? என ஐயுற்றான். அதனால் "என் ஐயம் இன்னதென அறிந்து பாடலியற்றுவார்க்கு ஆயிரம் பொன்" என்று சொல்லிச் சங்க மண்டபத்தில் ஒரு பொற்கிழியைத் தூக்கிவைத்தான். புலவர் எவரும் பாட அறியாராய் வருந்தியிருந்தனர்.

அவ்வூரில் தாய்தந்தையர் எவருமில்லாத ஒருவன், 'தருமி' என்பவன் இருந்தான். அவன் இறைவனை வணங்கி

‘உன்