பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

இளங்குமரனார் தமிழ்வளம் 31

பொன்னப்பன், கண்ணப்பன் என்பார் முறையே சமயச் செல்வரும், இலக்கியச் செல்வருமாக அமைக்கப் பெற்றுளர்; அவர்கள் உரையாடலில் இருவகை நலங்களும் 'கொள்ளிடம் காவிரி' யென இணைந்து பெருகுகின்றமை இனிமை தரக் கூடிய தாம்.

அம்மை திருக்கோயில் திருவாயிலில் நுழையும் அவர்கள் அப்பர் திருக்கோயிலைக் கண்டு, புது மண்டபத்தைப் பார்த்த அளவில் நூல் நிறைவு பெறுகின்றது.

வரலாற்று நூல்களாலும், இலக்கிய நூல்களாலும் அறியப் பெறும் செய்திகளினும் நேரில் கண்டு கண்டு, உணர்ந்து உணர்ந்து, நினைந்து நினைந்து கூறப்பெற்ற செய்திகளே இந் நூலின்கண் மிகுதியாம். மதுரைத் திருக்கோயில் வழிபாட்டுக்கு வருவார்க்கு இந்நூல் நல்லதொரு வழிகாட்டியாம் என்றும், வழிபட்டுச் செல்வார்க்கும் நினைவகலா ன்பம் தருவதாம் என்றும் யான் உறுதியாக நம்புகிறேன்.

இவ் வினிய நூலை எழுதுதற்கு என்னுள் எழுந்த உணர்வை ஊக்குவித்து, வழக்கம் போல வேண்டும் கருவி நூல்களை யெல்லாம் வழங்கி உதவியவர்கள் கழக ஆட்சியாளர் தாமரைச் செல்வர் உயர்திரு வ. சுப்பையாபிள்ளை அவர்களாவர். அவர்களுக்கும் இந்நூலை எழிலுற வெளியிட்டு உதவும் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்திற்கும், திருக்கோயில் கோபுரத்தின் மேல் அழைத்துச் சென்று காண்பித்து அருங்குறிப்புகள் சில தந்த அன்பர் திரு. கோவிந்தசாமி அவர் களுக்கும் நன்றியுடையேன். முன்னே வரலாறு எழுதிய பெருமக்கள் என் நினைவுக்குரியர். அவர்கள் நூலில் உரிய டங்களில் சுட்டப்பெற்றுள்ளனர் என்பது அறியத்தக்கது.

மதுரை 3.11.79

}

தமிழ்த் தொண்டன்,

இரா. இளங்குமரன்