பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

17)

18)

19)

20)

இளங்குமரனார் தமிழ்வளம் 31

போற்றுதலும், அவர்க்கு உற்றுழி உதவுதலும் தம் கடப்பாடாகக் கொண்டு சிறந்தனர்.

வாழ்தல் வேண்டிப் பொய் கூறுதலும், செய்யாதவற்றை யெல்லாம் செய்ததாகப் புனைந்துரைத்தலும் சங்கச் சான்றோர் அறியாதவை.

அரசியல்பணி, அமைதிப்பணி முதலியவற்றிலும் பெருமைமிக்க புலவர்கள் பங்கு கொண்டுள்ளனர்.

இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பலும் இலக்கணம் கண்டதற்கு இலக்கியம் படைத்தலுமாகிய மரபு நெறியை நன்கனம் போற்றினர்; 'மரபு நிலை திரியின் மானமில்லை' என்றும், 'மரபுநிலை திரியின் பிறிது பிறிதாகும்' என்றும் தெளிந்து இலக்கிய இலக்கணங்களை யாத்தனர்.

வையகத்தில் வானகத்தைப் படைத்தல்' அவர்கள் அடிப்படை நோக்காகலின், அதற்கேற்பவே வாழ்வு நெறிகளைப் படைத்துக் காட்டி அந்நெறியில் நிறுத் துமாறு கலைகளையும் படைத்து நெறிப்படுத்தினர்.

இவையெல்லாம் சங்க இலக்கியச் சால்புக்கு நிலைக்களங் களாக இருந்தன. ஆனால் இந்நிலையும் கட்டுக் கோப்பும் வரவர வீழ்ந்தன: வேந்தர்களின் அக்கறை வீழ்ந்தது. ஓரிருவர் கொண்ட வீறும் பேருக்கே பயன் பட்டது; அரச வழி முறைகளும் நெறிகெட்டுப் பிரிந்தன; உரிமையைக் காப்பதற்கும் பகைகளை யொழிப்பதற்கும் பொழுதெல்லாம் போயது; வாய்த்தபோது, பேரார்வம் கொண்ட வேந்தர்கள் ஒருசிலர் ஓரிரு புலவர்களைப் போற்றினர்; புலவர் அவை அழிந்தது; புலவர்கள் ஒற்றுமை குலைந்தது; வடமொழி வந்து வலுத்தது; ஆள்வோர் அரவணைப்பு வடமொழிக்கு மிகுந்தது; அரசியல், சமயம், கலை முதலாய பல்வேறு துறைகளையும் வடமொழி வரித்துக் கொண்டது; தமிழை அத்துறைகளில் அகற்றி வடமொழி கொடிகட்டிப் பறப்பதற்கே வேந்தர்கள், குறுநிலமன்னர்கள் துணைவாய்த்தது. இந்நிலை தொடர்ந்து வருங்கால், அயலார் படையெடுப்பும், ஆங்கிலவர் ஆட்சியும் தமிழையும் தமிழரையும் தலைக்கழித்தன. தமிழ் வளர்த்த மதுரையிலேயே தமிழின் நிலை இரங்கத்தக்கதாகப் போயிற்று எனின், மற்றை டங்களைச் சொல்வானேன்?