மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம்
ய
221
11
சிறந்து நடந்தது. "சங்கம் செய்வதைத் தங்கம் செய்யாது' என்பதைத் தமிழ்ச் சங்கம் எவருக்கும் விளக்கிக் காட்டியது. சங்கச் செயன்முறைச் சீர்மையை அறிய விரும்புவார்க்கு ஒரே ஒரு சான்றாக மூன்றாம் ஆண்டு நிகழ்ந்த வித்துவக் கூட்டம் என்னும் கல்விக் குழுக் கூட்டச் செய்தி செந்தமிழில் உள்ளது இந்நூலில் பின்னிணைப்பாகச் சேர்க்கப் அதனைக்கண்டு சங்கப்பணிச் சிறப்பைக்
உள்ளவாறே பட்டுள்ளது. கண்டுகொள்க.
மூன்றாம் ஆண்டு நிகழ்ந்த வித்துவக் கூட்டத்தில் கலந்துகொண்ட பெரும் புலவர்கள் பத்தொன்பதின்மர். கூட்டத்திற்கு வர இயலாமை தெரிவித்துச் சங்கப்பணிக்குத் தம் ஆர்வமுடைமையையும், ஒத்துழைப்பையும் கடித வழியாகவும் தொலைவரிச் செய்தி வழியாகவும் தெரிவித்த பெரும் புலவர்கள் பதினால்வர். இவர்கள் சென்னைமுதல் கன்னியீறான தமிழ்கூறு நல்லுலகப் பரப்பெல்லாம் தழுவியவர்கள் என்பதும், ஈழத்துப் புலவர்களும் இடம் பெற்றிருந்தனர் என்பதும் குறிப்பிடற் குரியன.
இக்கூட்டத்தில் ஆய்ந்து நிறைவேற்றப் பெற்ற தீர்மானங்கள் இருபத்திரண்டாகும். அவை, சங்க உறுப்பினர் சேர்க்கை விதி, உறுப்பினர் கட்டணம், ஆண்டு விழாவுக்கு வரும் புலவர்கள் போக்குவரவு செலவு, ஏடு படியெடுத்துத் தருதல், இதழ் வெளியீட்டுக்குக் கட்டுரை தேர்ந்து கொள்ளல், கட்டுரை வரைவார்க்குக் கைம்மாறு தருதல், தனித் தமிழ்த் தேர்வுத் திட்டம், அத்தேர்வுக்குரிய பாட நூல்கள், தேர்வு மையங்கள், தேர்வாளர்கள் இன்னவை பற்றியவாம்.
தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து பணியாற்ற விரும்பும் சங்கங்களை இணைத்துக் கொள்ளும் விதிமுறைகளும் இக்கூட்டத்தில் அமைக்கப் பெற்றன. கொழும்பு அரசினர் கல்லூரித் தலைவர் திரு. லீ என்பார், 'தமிழை இலண்டன் பல்கலைக் கழகத் தேர்வுக்கு ஒரு மொழியாக எடுத்துக் கொள்ள வேண்டும்' என்று வேண்டுகோள் விடுத்துள்ளதைப் பாராட்டி ஒரு நன்றியறிதல் தீர்மானமும் நிறைவேற்றினர்.
ஓர் அமைப்பு தேக்கமாகாமல் இயக்கமாவது எப்படி என்பதை இத்தீர்மானங்கள் இருபத்திரண்டும் தெள்ளிதில் விளக்குகின்றன. ஆனால் தீர்மானம் போடும் அளவில் கடமை தீர்ந்து விட்டதாக அமையும் அமைப்புகளும் உள்ளனவே! இவ்வமைப்பும் அத்தகைத்தோ? இதன் தீர்மானங்கள்