பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்

மதுரைக் கோயில் வரலாறு

11

இக் கொடியவர்களின் வெறிச்செயல்களை இங்கென்ன, கோயில்தோறும் காணலாம்! பெரும்பாலும் சிற்பங்கள் தோறும் காணலாம். இதனை நினைக்க நெஞ்சம் உருகும்! கண்ணீர் பெருகும்!

66

சங்கு சக்கரம் ஏந்திய இவளைப் பார்! இவள் பெயர் ‘வைணவி”. விட்டுணு ஆகிய திருமாலே சத்தி என்பது சிவக் கொள்கை. அச் சத்தி, தன் பெயருக்கு ஏற்ப இக்கோலம் கொண்டிருத்தல் மிகப் பொருத்தம் தான். வைணவிக்கு எதிரே தண்டும் செண்டும் (ஒரு கருவி) கொண்டு இருப்பவன் மகேசுவரி; அடுத்து இருப்பவர் மகாலக்குமியும் மனோன்மணியும் ஆவர்.

பொன்னப்பா மனத்துளே மணியாக இருப்பவள் தானே மனோன்மணி! எவர் மனத்துள் மணியாக இருப்பாள் என்றார், 'நினைப்பவர் மனத்துள்' என்பது தானே விடை. நினைப்பவர் மனமே கோயிலாக் கொள்ளும் இறைவி இப்படி மணியாகி, ஒலியும், ஒளியும் செய்கிறாள்.

பொன் : கண்ணப்பா, அரிய ஆராய்ச்சிதான்! ஆனால், இவளைப் பார்! இவள்தன் மனத்துளே மணியைத் தேடி, அகநோக்கு நோக்கிக் கொண்டிருக்கின்றாள். சிவமணியை உருட்டிக் கொண்டு ஓக (யோக) நிலையிலே ஊன்றியிருக்கிறாள்! உள்ளமே இறையறை கோயில் என்பாள் போலத் தளிர்க்கையிலே தாமரை மலரைக் கொண்டிருக்கின்றாள்! உலகோர்க்கு உய்வு காட்ட இறைவனே தவக்கோலம் தாங்கியமைபோல, இவ் இறைவியும் தவக்கோலம் தாங்கியுள்ளாள்! எண்ண எண்ண எத்தனை இனிமை!

கண்

அப்படியானால் "தவம்செய்த தவமாம் தையல்" என்கின்றாய் இவளை!

பொன்: கம்பன் வாக்கு, 'களிநடம்' புரிகின்றது உன்னிடம்! கண் : என்ன அப்படிச் சொல்கிறாய்? 'சார்ந்ததன் வண்ண மாதல்' இயற்கைதானே!

பொன் : சரி; செய்திக்கு வருவோம். அம்மையின் அழகுமனை வாயில் (முகப்பு) மண்டபத்தைச் சத்தி மண்டபம் ஆக்கிய அருமையை வியக்கவேண்டும் அன்றோ!