பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம்

249

மு.

இரா. இராகவஐயங்கார், இரா. சுப்பிரமணியக்கவிராயர், தி.த.கனகசுந்தரம்பிள்ளை, அ. குமாரசாமிப் பிள்ளை, வெ.ப. சுப்பிரமணிய முதலியார், மு.இராகவையங்கார் என்பார் குறித்துளர். பாலபண்டிதர் வினாத்தாள்களை முறையே இ.வை அனந்தராமையர், ந. மு. வேங்கடசாமி நாட்டார்,ரெ. அப்புவையங்கார், முகதிரேசச் செட்டியார். அ. கந்தசாமிப் பிள்ளை, ச. அரிகர ஐயர், வி. முத்துசாமி ஐயர் என்பார் குறித்துளர். பிரவேசபண்டிதர் தேர்வு வினாத்தாள்களை முறையே அ. கோபாலையர், கோபாலகிருட்டிண மாசாரியார் ஆ.கார்மேகக்கோனார் ரெ. இராமையங்கார், மு. ரா. அருணாசலக்கவிராயர், திருஞானசம்பந்தக்கவிராயர் ச.பூபாலப்பிள்ளை என்பார் குறித்துளர். இவ்வாறு பி. ஏ. முதலிய தேர்வு வினாத்தாள்களும் முழுதுற அச்சிடப் பெற்றுள. படித்த பாடத்தை மாணவர்கள் தாம் தாமே ஆராய்ந்து கொள்வதற்கும், தேர்வுக்குத் தம்மை அணியப்படுத்திக் கொள்வதற்கும் இம்முறை வாய்ப்பாம். தேர்வு வினாவிடை களை அச்சிட்டு விற்பனையைப் பெருக்கிக் கொள்ள முந்தும் செய்தித்தாள்கள் மலிந்துள்ள இக்கால நிலையில், அறுபது ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்ச்சங்கம் மேற்கொண்ட அரிய கடைப்பிடி தெளிவாகாமற் போகாது.

1935 ஆம் ஆண்டில் பண்டிதர் முத்தேர்வுப் பாடத் திட்டங்களும் மாற்றியமைக்கப் பெற்றன. 1953 இல் தேர்வு அமைப்பாளர் என்னும் பதவியமைப்பு ஏற்படுத்தப் பெற்றுளது. தேர்வு அமைப்பாளராகத் திரு. கி. பழனியப்பன் அவர்கள் திகழ்ந்தனர். பின்னர்ப் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர் களும் தேர்வுக் குழுத்தலைவராக இருந்து அணி செய்துள்ளனர்.

1934 ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 15 ஆம் நாள் (பவ ஆடி 31) தமிழ்ச் சங்கப் பேரவை கூடியது. அதில் நாவலர் ச. சோமசந்தர பாரதியார், தேர்வு தொடர்பான ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அதனைத் திரு. வெ.ப. சுப்பிரமணிய முதலியார் வழிமொழிந்தார். அத் தீர்மானம்: "இச்சங்கத் தனித்தமிழ்ப் பரீக்ஷைகளில் இப்போதுள்ள படியே ஏழுபாட வினாப் பத்திரங்கள் இருக்க வேண்டும் என்றும், ஆனால், அவைகளை இலக்கண வினாப்பத்திரம் 2, செய்யுளி யற்றல் வினாப்பத்திரம் 1 ஆக மூன்று வினாப் பத்திரங்களும் முதல் வகுப்பும், செய்யுட்பாட இலக்கிய வினாப்பத்திரம் 2, வசனபாட வினாப்பத்திரம் 1, வசனக்கட்டுரை வினாப் பத்திரம் 1