252
—
இளங்குமரனார் தமிழ்வளம் 31
அப்பணியைச் செய்தற்குச் சங்கத் தலைவர் எடுத்துக் கொள்ள வேண்டிய முயற்சி பற்றியும் தீர்மானித்துள்ளனர். (செந்: 13:428) இவற்றையெல்லாம் நோக்க அந்நாளில் தமிழ்ச் சங்கம் மேற்கொண்டிருந்த மொழிப் பாதுகாப்பு நன்கு புலப்படும்.
சங்கத் தனித் தமிழ்த் தேர்வு, ஆங்கிலத் தமிழ்த் தேர்வு என்னும் இருவகைத் தேர்வாலும் சிறந்து, நிலைத்த தமிழ்த் தொண்டு செய்தோர் பட்டியல் நெடிதாகும். தமிழுக்கெனக் கல்லூரியும், பாடத்திட்டமும்,தேர்வும் தொடங்கிய முதல் அமைப்பே இச்சங்கம் ஆகலின், இந்நாளைத் தமிழ்ப் புலமையர் எந்நிலையர், எத்தகுதியர் எனினும் அவர்க்கெல்லாம் மூலவராக விளங்கியவர்த தமிழ்ச் சங்கப் பண்டிதர் ஒருவரே என்பதைத் திட்டமாகக் கூறிவிடமுடியும்! ஆகலின் அவரை யெல்லாம் சுட்டுதல் வேண்டா. எனினும், சிலரையேனும் சுட்டுதல் கடமையெனக் கொள்வோம்.
சு.அரிகர ஐயர். சு. அருளம்பலனார். அன்புகருணை யானந்தா, இரா. ராசகோபாலையங்கார், இராசாக் கண்ணனார், வ.சு. ராசையனார், இராமசுப்பிரமணிய நாவலர், லெ.ப. கரு, இராமநாதன் செட்டியார், மீ. பொன். இராமநாதன் செட்டியார், தி. இராமானுசன், இராமையங்கார், இலட்சுமி நரசிம்மன், ஐயன்பெருமாள் கோனார், அ. கந்தசாமிப்பிள்ளை, மீ, கந்தசாமிப்புலவர், கந்தசாமியார், கனகராசையர், வர்மாவதாரக் கோனார், டி.வி. கோபாலன், சங்குப்புலவர், இல. சண்முகசுந்தரம், சிவசுப்பிரமணிய ஐயர், தேவநேயப்பாவாணர், நடேசகவுண்டர், நயினார் முகமது நாராயணசாமி, முத்துசாமிப் புலவர், முத்துவேங்கடாசலம், நா. பார்த்தசாரதி, புருசோத்தம நாயுடு, பூவராகம் பிள்ளை, வீரராகவ ஐயங்கார், வேங்கடசாமி நாட்டார் என்பார். தனித்தமிழ்த் தேர்வில் தேறிச் சிறப்புற்றோர். இத்தகையர் பன்னூற்றுவர் என்பது அறிந்ததே. இவர்களுள் இத்தமிழ்ச் சங்கத் தேர்வுப் பயனை ஒருவர் உரைப்பது கேட்போம்:
(C
அன்று ஆங்கிலப் பற்றாளனாகவும் பேச்சாளனாகவும் மாணவர் (ஆங்கில) இலக்கியமன்றச் செயலாளனாகவும் இருந்ததனால், ஆங்கில இலக்கியத்தைக் கரைகாணவும், ஆக்கசுப்போர்டு (oxford) என்னும் எருதந்துறையிற் பணி கொள்ளவும் விரும்பினேன். ஆயினும், இறுதியில் தமிழ் கற்றதினாலும். சைப்பாட்டும் செய்யுளும் இயற்றி வந்ததனாலும், இசைத்தமிழ்ப் பித்தனானதனாலும், நான்