பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

இளங்குமரனார் தமிழ்வளம் - 31 318

கண் : ஆமாம்!

பொன் : அதனினும் வியக்க வேண்டியதும் உண்டு. இம்மண்டப முகப்பில் காவல்வீரர்களை நிறுத்தி வைக்காமல், காவல் பெண்டுகளை நிறுத்தி வைத்தானே கலைஞன். அவன் செயலை வியந்து பாராட்டத்தானே வேண்டும்! இன்னும் ஒரு வியப்பான செய்தியும் உண்டு. இந்த அழகிய மண்டபத்தை அமைத்த சத்தியர் இருவர் என்பதை நீ அறிந்தால் மேலும் வியப்பு அடைவாய்!

கண்

அந்தச் சத்தியர் இருவர் எவர்?

பொன் : திருப்பணிக்கே தம்மை ஆளாக்கிக் கொண்ட வேந்தர் திருமலை நாயக்கர் பட்டத்துத் தேவியர் உருத்திரபதி யம்மையும், தோளியம்மையுமே அவர்கள்.

கண் : அந்த இருவருக்கும் அம்மைமேல் அள்ளூறிநின்ற அன்பே, இந்த அட்டசத்தி மண்டபம் என்றால், அவர்களை நினைந்த சிற்பி, அவர்கள் திருவுருவை உள்ளத்தில் ஓவியமாகத் தாங்கி, இச் சிற்பங்களை வார்த்தான் என்றால்தான் என்ன? புனைந்துரை யாகுமா?

பொன் : புனைந்துரையே ஆனாலும், பொருத்தமானதுதான்! இதோபார்! சத்தி மண்டபத்தின் மேல்பால் மூத்த பிள்ளையாரும் இளைய பிள்ளையாரும் அருள் சுரந்து காட்சி வழங்குகின்றனர். தன் செல்வச் சிறுவர் களைத் தன் முன்னே நிறுத்தித் தளிர்ப்படைய எந்தத் தாய்தான் விரும்பமாட்டாள்? இந்தப் பிள்ளைகள் இருப்பிடத்திலும் அமைந்துள்ள ஓர் ஒழுங்கைப் பார்த்தாயா?

கண்

நீ இப்படிக் கேட்பாய் என எண்ணினேன். முன்னரே பார்த்த நீ ஒரு முடிவுக்கு வந்திருப்பாய். இருந்தாலும் என்னிடம் கேட்டதால் நான் சொல்லக் கடமைப் பட்டுள்ளேன். நம்மவர்க்குள் பண்டுதொட்டு ஒரு பண்பாடு உண்டு. மனை ஆகட்டும்; நிலம் ஆகட்டும்; மூத்தவனுக்கு மேற்குப் பக்கமோ, தெற்குப் பக்கமோ தரப்படும். இளையவனுக்குக் கிழக்குப் பக்கமோ வடக்குப் பக்கமோ தரப்படும். இந்த ஒழுங்குமுறையை உணர்ந்த கட்டடக் கலைஞன் மூத்தபிள்ளையாரைத் தென்பால் வைத்தான். இளைய பிள்ளையாரை வடபால்