பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258

-

இளங்குமரனார் தமிழ்வளம் 31ஓ

ஒவ்வோர் இதழும் 64 பக்கங்களுக்குக் குறையாமல் 80 பக்ங்களுக்கு மிகாமல் வந்துள்ளது.

திருவாளர்கள்

சி.

இதழாசிரியர்கள் ருவருடன், இலக்குமணப்போற்றி, சி. கணேசையர், நா. கதிரைவேற்பிள்ளை, வி.கனகசபைப்பிள்ளை, குப்புசாமி முதலியார் கல்குளம், அ. குமாரசாமிப்பிள்ளை, குலாம் காதிறு நாவலர், து.அ. கோபிநாத ராவ், அ. சண்முகம்பிள்ளை, எஸ்.சாமிநாதையர், டி.சி. சீனிவாசையங்கார்.தி.ஈ.சீனிவாசா சாரியார், சே. சுப்பிரமணியக் கவிராயர், வி. கோ. சூரிய நாராயண சாத்திரியார், காசிவாசி செந்திநாதையர், தேவ நாதாச்சாரி, ச.ம.நடேச சாத்திரி, சே.ப. நரசிம்மலு நாயுடு, அ.நாராயணசாமி ஐயர், எஸ். நாராயணசாமி ஐயர், திரு. நாராயண ஐயங்கார், பி. பாண்டித்துரை, பால்வண்ண முதலியார், மலை நாட்டுவாசி, ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை, வெள்ளியந் திருமலைகிழார் ஆகியோர் தம் ஆராய்ச்சிப் படைப்புகள் இத் தொகுதியில் இடம் பெற்றுள.

இப்படைப்புகள் இதழ் தொடங்குங்கால் வகுத்துக் கொள்ளப் பெற்ற நோக்கங்களை நிறைவேற்றுமாறு அமைந் தனவோ எனின், முற்றாக அவ்வாறே அமைந்தன என்பதே மறுமொழியாம். அவற்றைமுறையே அறிவோம்.

1) அச்சிடப் பெறாத நூல்கள் வெளியிடுதல் :

மாறன் பொறையனார் அருளிச் செய்த ஐந்திணை ஐம்பது மூலமும் உரையும், குணவீர பண்டிதர் இயற்றிய நேமிநாதம் மூலமும் உரையும், மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ் சேந்தனார் அருளிச்செய்த இனியது நாற்பது மூலமும் உரையும், பொன்னவன் இயற்றிய கனாநூல் மூலம், திருக்குருகூர் சிறிய இரத்தின கவிராயர் இயற்றிய புலவராற்றுப் படை மூலம் ஆகிய நூல்கள் முதல் தொகுதியில் அச்சிட்டு முடிக்கப் பெற்றுள். குண்டலகேசி, வளையாபதி என்னும் காவியங்கள் இரண்ட னுள்ளும் கிடைக்கும் பாடல்கள் தொகுக்கப்பட்டு ஆய்வுக் குறிப்புடன் வெளியிடப்பெற்றுள. அவிரோதி ஆழ்வார் இயற்றிய திருநூற்றந்தாதி மூலமும் உரையும் இத் தொகுதி எட்டாம் பகுதியில் தொடங்கப் பெற்று இரண்டாம் தொகுதி முதல் பகுதியில் நிறைவுறுகின்றது. இவை சங்கத்துப் பாண்டியன் புத்தகசாலையில் தொகுத்து வைக்கப் பெற்ற ஏட்டுச் சுவடிகளைக் கொண்டு ஆராய்ந்து அருங் குறிப்பும் எழுதி வெளியிடப் பெற்றவையாம்.