பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைக் கோயில் வரலாறு

13

வைத்தான். மேலே நாம் பார்க்க இருக்கும் 'இருட்டு மண்டபத் திலும் பிற இடங்களிலும் இந்த ஒழுங்கே இருப்பதைக் காணலாம்.

பொன் : சமுதாய நலம் கருதிய எத்தனையோ திட்டங்களும் அமைப்புகளும் கோயிலில் உண்டு. அவற்றை ஊன்றி உணர்ந்து, உண்மைப் பொருள் கண்டு போற்றாமையால், கேடுகள் பல சூழ்ந்தன என்பதை நினைக்கவே வருத்தமாக உள்ளது. சிற்பக்கூடமாகிய இந்த மண்டபம் சுதை வேலையும் வண்ண வேலையும் பளிச்சிடும் ஓவியக் கூடமாகவும் விளங்குவதைக் கண்டு மகிழ்கிறாய்! கேள்; நில்லாமல் ஓடும் உலகம் இது. இந்த ஓட்டத்துக்குத் தக்கவாறு விரிவான அரிய பெரிய செய்திகளையும் சுருக்கமாக ஓரிரு காட்சிகளாகத் தீட்டிக் காட்டி யுள்ளனர். அரும்பாடு என்பது உண்மைதான்! ஆனால், பெரும்பயன் என்பதை மறக்க இயலாது.

கண்

ஓவியந் தீட்ட வல்லவர்களைச் சங்கத்தார்,“கண்ணுள் னைஞர்" என்று கூறினர். அவர்கள், 'நோக்கினார் கண்ணிடத்தே தம் தொழில் திறத்தை நிறுத்தவல்லவர்' ஆதலின் அப் பெயர் பெற்றனர், என்பர். ஆதலால் நீ கூறிய விளக்கம் ஓவியக்கலைக்குரிய விளக்கமேயாம். மேலே சொல்;

பொன் : பாண்டியன் மலயத்துவசன்; அவன் மனைவி காஞ்சன மாலை; அவளுக்கு மகப்பேறு இல்லை. அவளுக்கு மீனாட்சி 'நான் உன் மகளாகப் பிறப்பேன்' என்று வரம் தருவது இந்த ஓவியம்; அம்மை திருப்பிறப்பு அடைவது இந்த ஓவியம்; அவள் திருமுடி சூட்டிக் கொள்வது இந்த ஓவியம்; அவள் அரசு செய்தல் இவ்வோவியம்; அம்மை வீரவுலா (திக்குவிசயம்) வின்போது இறைவனைக் கண்டு நிற்றல் இவ்வோவியம்; இறைவனும் இறைவியும் இணைந்திருத்தல் இவ்வோவியம்; சோமசுந்தரர் ஆட்சி, உக்கிர பாண்டியர் பிறப்பு, உக்கிரபாண்டியர் முடிசூட்டு, உக்கிர பாண்டியர் அரசாட்சி என்பவை இவ்வோவியங்கள்.

கண்

அம்மையைப் 'பசுங்கொடி, ‘பசுந்தொகை,' 'பசுங்குதலை' ‘மழலைக் கிளி' என்று சொல்லிச் சொல்லி இன்புறுவார் குமரகுருபரர். இவ்வோவியர் தூரிகை அம்மையைப் பசுமை வண்ணத்தில் விளையாடிக் கொஞ்சி மகிழ்ந்