பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278

-

இளங்குமரனார் தமிழ்வளம் 31ஓ

புலவருமான

இச்சேதுபதி, கருத்துமாறுபாடு உடையரேனும் கன்னித்தமிழ் வல்லாராய்த் திகழ்வாரைக் கண்ணெனக் கருதிப் போற்றும் பெருந்தகையர். இதனை நாவலர் ச. சோமசுந்தர பாரதியார் குறிப்பிடும் ஒரு நிகழ்ச்சியாலும், தசரதன் குறையும் கைகேயி நிறையும் என்னும் தம் நூற்படையலாலும் அறியலாம். "நான் போந்த நீராவித் தொடர்ப்பண்டி நள்ளிருளில் நான்மாடக் கூடலை நணுகிற்று. ஆண்டு நான் இறங்கி மறுதொடரில் இடமின்றி மறுகுகையில், மதுரைத் தமிழ்ச்சங்கப் பெருநாவலரும் செந்தமிழ் முதற்பத்திராசிரியரும் சேது சமத்தானத் தலைமைப் உயர்திரு. ரா. இராகவையங்காரவர்கள் கண்டு அருமையுடன் அழைத்துச் சென்று தம் அரசர் பக்கல் உய்த்து உதவினார்கள். இறைமையைப் போல் நிறை புலமை நிருபரெனத் தமிழகத்தே தலைநின்ற திருமன்னர் முகமலர்ந்து பெருந்தகையால் முகமனுடன் வரவேற்றுத் தங்குழுவிலெனைச் சேர்த்துத் தலையளியுஞ் செய்தசெயல் என்றும் மறக்ககில்லேன். அவலம் நீக்கி அன்றிரவு வழிகழியப் புலர்பொழுதில் தஞ்சையுற்றேன். வழியிடையே, நாவலரால் எனையழைத்த சங்கக் கூட்டம் சேதுகாவலர் பாதுகாவலில் நடைபெறும் நற்செய்தியும் தமிழரசர் தம்சபைத்தலைமை முன்னுரையில் என்பால் அன்புரைகள் ஏதோசில கூறப்போகும் குறிப்பும் உணர்த்தப் பெற்றேன். கூடல் நான்காஞ் சங்க விழாக் கூட்டமொன்றில் நம்முள் வேற்றுமை யுணர்ச்சி வித்தவந்த சில வித்தகருக்கு மாறுகூறி ஒற்றுமை நலத்தை வற்புறுத்த முயன்ற என் ஒரு சிற்றுரை கேட்டதன்றிப் பிறிதெனை நன்கறியாப் பெருந் தமிழ் வேந்தர் பேரன்பால் என்னை ஒரு பொருட்படுத்தித்தம். முன்னுரையிற் சுட்ட நினைத்த பெருங்கருணை என் தகவின்மையை நினைப்பூட்டி என்னைப்பெரிதும் வருத்தியதுடன் அவ்வரசர் அவ்வரசர் பிரான் குணப்பெருமையை விளக்கி என்னை ஆட்கொண்டது'

சங்க மருவித் தழையத் தமிழ்தழுவி எங்கும் புலவர் இனிதிசைக்கத் - தங்கும்

இரவி மருமான் இராசரா சேசற்

குரிமையிது செய்தேன் உவந்து',

என்பது அவர் குறிப்பும், படையலுமாம்.

நாவலர் பாரதியார்க்கு

வ்வாறு ஏற்பட்ட பற்றுதல்

தான், தமிழ்ச் சங்க உறுப்பினராகவும், புலமை வித்தகராகவும்,