பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம்

281

'பல நாடுகளிலுமுள்ள சான்றோர்கள் தம் நுண்ணறிவால் வெளிப்படுத்தும் புதுமைகள் பலவற்றையும் காலதேச இயல்புக்கு ஏற்பத் தமிழ் மக்களும் தமிழ்மொழி மூலம் அறிந்து முன்னேற்றமடையத் தக்கதாய்த் தமிழ்மொழியை வளப்படுத்த வேண்டியது இன்றியமையாததாகும். அவ்விதம் புதிய கருத்துக்கள் புதிய பொருள்கள் இவற்றை வெளியிடுவதில் கண்மூடித் தனமாகப் பிறமொழிச் சொற்களைக் கண்டவாறு பயன்படுத்தாமல் அவற்றிற்குரிய தமிழ்ச் சொற்களையும், தமிழ் மொழியின் அமைப்பு இயல்புகளுக்குத் தக்கவாறு படைத்த சொற்களையும் வழங்குதலே சிறந்ததாகும். அவ்விதம் பயன் படுத்துவது தான் தமிழ்மொழியின் தன்மையையும் தூய்மையையும் போற்றுவதாகும். தமிழ்ச்சொற்களாலே நன்கு விளக்கிக் காட்டவேண்டியிருக்க அதைவிட்டு Hydro Electric Power'என்று ஏன் ஆங்கிலத்தொடர் மொழியைப் பயன்படுத்த வேண்டும். இதுபோன்று பல எடுத்துக்காட்டுகளைக் காட்டக் கூடுமெனினும், அது மிகையாகையாற் கூறாமல் விடுகிறேன்.'

"மேலும் தமிழில் உரையாடும் போது பிறமொழிச் சொற்களை இடையிடையே கலந்து பேசுவதை நோக்கி என் மனம் வருந்துகின்றது. அவ்வழக்கத்தை முற்றும் விட்டு விட வேண்டுமென்று நான் தெரிவித்துக் கொள்கிறேன். அவ்வழக்கம் பேச்சில்மட்டும் நில்லாது எழுத்திலும் அச்சிலும் கூட வழங்கக் காணுகிறோம் 'கேஸ் டிஸ்மிஸ்' ஆயிற்று என்று சொல்வதைக் கேட்பது இயல்பாயுள்ளது. 'வழக்குத் தள்ளுபடி ஆயிற்று' என்று எளிதாயும் தெளிவாயும் தமிழிற் கூறுலாமே"

இம் மணிமொழிகளைச் செந்தமிழ் கடைப்பிடித்திருந்தால் கூட எவ்வளவு சிறப்பாக இருந்திருக்கும்?

23-12-1913 இல் தினகர் தலைமையில் நிகழ்ந்த செயற்குழுக் கூட்டத்தில், சங்க அலுவலகக் கட்டிடத்தை அடுத்துள்ள 'மொசானிக் விடுதியை' விலைக்கு வாங்கவும், அதற்குரிய தொகையை வங்கியிருப்பில் இருந்து எடுத்துக் கொள்ளவும் தீர்மானிக்கப் பெற்றது.

சங்கக் கட்டிடத்திற்கும், தொட்டப்பநாயக்கனூர் குறுநில மன்னர்மனைக்கும் இடையேயுள்ள சங்கச் சுற்றுச் சுவரை இடித்துவிட்டு, இடத்தில் புதுச்சுவர் எழுப்பி அதில் தமக்கு எவ்வித உரிமையும் பாராட்டப் பெறாமல் முழுஉரிமையும் சங்கத்துக்கு ஆக்க இசைவாரானால், அக்குறுநில மன்னர்