பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம் ஓ

295

சங்கத்தைத் தோற்றுவித்தனர். அவர்கள் அதனைத் தோற்றுவித்த காலம் 1890 ஏப்பிரல் திங்கள் ஆகும். அக் கூட்டத்திலேயே அவ்வமைப்பின் ஆட்சிக் குழுவினரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தலைவர். திரு.சோமசுந்தரஞ் செட்டியார். செயலர் திரு.டி. பாலசுந்தர முதலியார். உறுப்பினர்கள்: இராவ்பகதூர் பூண்டி அரங்கநாத முதலியார், திரு. பி. வி, விசயரங்க முதலியார், திரு. சேசகிரி சாத்திரியார், திரு.சி.வை.தாமோதரம்பிள்ளை, இராவ்பகதூர் இராமசாமி முதலியார், திரு.எம். வீரராகவாச் சாரியார் என்போர்.

இச்சங்கத்தின் நோக்கங்கள் இவை யென்றும் அவ்வாட்சிக் குழு சென்னை 'காசுமா பொலிடன் கிளப்பில்' 1-5-1890 இல் கூடித் தீர்மானித்தது.

1. தமிழ்ப் புத்தக சாலையொன்று ஏற்படுத்தி அதற்கு இதுவரையில் தமிழில் அச்சாகியிருக்கும் கிரந்தங்களை யெல்லாம் சேகரித்தல்.

2. இதுவரையில் அச்சிடப்படாத கிரந்தங்களின் ஏட்டுப் பிரதிகளையும் அச்சிடப்பட்டுள்ள நல்ல கிரந்தங்களையும் இனிமேல் எப்போதாவது இன்னும் நன்றாய்ச் சீர்திருந்துவதற்கு உபயோகமாகும்படி அவைகளின் ஏட்டுப்பிரதிகளையும் சேகரித்து வைத்தல்.

3. தமிழில் சுயமாகவேனும் மொழிபெயர்ப்பிலேனும் எளிய செந்தமிழ் நன்னடையில் ஜனங்களுக்கு அனுபவத்தில் உபயோகப் படத்தக்கதாகவாவது, சாஸ்திர சம்பந்தமான தாகவாவது உள்ள நூல்களை வசனரூபமாகச் சித்தஞ்செய்து பிரசுரிக்க வேண்டிய ஏற்பாடுகள் செய்யல்.

4. தமிழில் பிரபலமாயுள்ள எல்லாக் கிரந்தங்களினுடைய பேர்களும் கூடுமான வரையில் அவற்றிலடங்கிய விஷயங்களின் விவரமும் அவைகள் இன்னார் வசமிருக்கிற தென்கிற விவரமும் அடங்கிய சரியான ஜாபிதா ஒன்று தயார் செய்யல்.

5. தத்துவ ஞான சம்பந்தமாகவாவது, வித்தியா சம்பந்தமாகவாவது, அருமையாயுள்ள விஷயங்களைப் பற்றிச் சிறந்த பிரபந்தங்கள் எழுதி வாசிக்க அல்லது உபந்நியாசங்கள் செய்ய ஏற்பாடு செய்யல்.

6. இதுவரையிதும் அச்சிடப்படாது இப்போது கையேட்டுப் பிரதிகளாயிருக்கும் நூல்களில் பிரசுரிக்கத் தகுந்ததைப் பார்த்து