பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

கண்

இளங்குமரனார் தமிழ்வளம் 31ஓ

ஈடுபட்டோ, அவன் செய்யும் செயற்கரும் செயலில் ஈடுபட்டோ உள்ளுருகி உவகை பெருகி நிற்கிறாள்! இந்த உவகையால் தன்னை ஒப்பனை செய்து கொள் கிறாளோ?

இவளை இந்த மேல்பக்கம் வந்து நின்று பார். என்ன அழகாக புன்னகை! இதழ்க்கடையில் இதமான நகைப்பை எப்படிப் படைத்தான் இந்தப் படைப்பாளி? இப்படிக் கீழ்ப்பக்கம் வந்து பார்! இவள் உள்ளுக்குள் அமைந்த கிளுகிளுப்பை வெளிக்காட்டும் ஆழ்ந்த மலர்ச்சியல்லவோ வெளிப்படுகிறது! ஏறிய கைப்பக்கம் தலையைத் தூக்கி, இறங்கிய கைப்பக்கம் தலையைத் தாழ்த்திக் கண்ணைச் சாய்த்து கருத்தாக எதையோ இவள் பார்க்கிறாளே! கண்ணப்பா! என்ன

எதுவும் சொல்லாமல் என்ன தான் நினைத்துக் கொண்டிருக்கின்றாய்?

சொல்லத்தான் நினைக்கின்றேன். ஆனால் சொல்ல முடியாமல் திகைக்கின்றேன். இதுதான் வியப்பு நிலை! கேள்; இவள் வேட்டுவச்சிதான்; இவன் வேடன்தான்; இவள் தலைமேல் ஐந்தலைப் பாம்பு ஆடுவதைப் பார்! இவள் உண்மை வேட்டுவச்சிதானா? வேட்டுவச்சி வடிவில் வந்த வேறொருத்தியா?

பொன் : நல்ல வினாவைத் தொடுத்தாய் கண்ணப்பா! இப் பொழுது எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகின்றது

கண்

கதை ஒன்றும் வேண்டா. ஊருக்குப் போய்ப் பேசிக் கொள்ளலாம். இப்பொழுது இந்தச் சிற்பங்களைப் பற்றிச் சொல்லு; திசை திருப்பாதே.

பொன் : அப்பா, கண்ணப்பா, நான் திசை திருப்பவில்லை. இச்சிலைகளைப் பற்றிய கதையைத்தான் சொல்லப் போகிறேன். அது திருவிளையாடற் புராணத்தில் உள்ளது.

கண் : திருவிளையாடற் புராணத்திலா?

பொன் : ஆம்; அதில் மாபாதகம் தீர்த்த படலத்தில். கண் : சரி சரி! நான் ஐயப்பட்டது சரியாகப் போயிற்று. இறைவன் வேடனாகவும், இறைவி வேட்டு வச்சி யாகவும் வந்து மாபாவிக்கு அருள் செய்தது தானே! அது சரியாக எனக்கு நினைவுக்கு வரவில்லை. நீ சொல்.