பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம்

301

ஞாயங்களாவன- இம்மதுரைக்கும் தமிழுக்கும் சங்கத் திற்கும் உரிய முழுமுதற் கடவுளாகிய ஆலவாயடிகள் திருவிளை யாடலாதலாலும், முதலில் அச்சிடும் புத்தகம் நமது சங்கத்திற்குத் தலைமை வித்வானாம் தங்களாற் பார்வையிடப்பட்டதாக வெளியாவது இன்றியமையாச் சிறப்புடைய தாதலாலுமேயாம். இது விஷயத்தில் யான்தங்கட்குக் கொடுக்கும் சிரமத்திற்கு என்னை மன்னிக்குமாறு கேட்டுக்கொள்ளும்,

தங்கள் நண்பன்,

பாண்டித்துரை

21-12-02

மதுரை.

நன்கொடையாகத் தர இசைந்த பணத்தை வேலை மிகுதியால் உடனே அனுப்ப இயலாமை குறித்து வருந்துவதும் அதனைத் தம்பெரும் பிழையாக நினைவதும், பொறுத்தருளும் படி வேண்டுவதும் செல்வர்களிடம் எளிமையாய்க் காணக் கிடக்கும் செய்திகளோ? தாம் புரவலராக இருந்தும் பணிந்து இரப்பார் போல நூல் வெளியிடுதற்குரிய தம்விருப்பை எழுதி வேண்டுதலை எவரே செய்வார்? பாண்டித்துரையின் பிறப் பொடும் வந்த பெருங்குணங்கள் இவை என்பதையன்றிக் கூற என்ன இருக்கிறது? பிறர்க்கு அரிதாம் செயல்கள் இவர்க்கு எளிதாய் இயன்றமை இத்தன்மைகளாலேயேயாம்.

பெருவள்ளலாகத் திகழ்ந்த பாண்டித்துரையார் தமிழ்க் காப்பில் அரிமாவாகத் திகழ்ந்தமைக்கு ஒரோ ஒரு சான்று போதும்.

கிறித்தவப் பாதிரியார் ஒருவர் திருக்குறளைப் பயின்றார். அவர் ஆங்கிலவர்; அவர் தமிழைப் பயின்று அதன் செய்யுள் இலக்கணமும் கற்ற அளவில், தாமே ஒருமுடிவுக்கு வந்தார். திருக்குறளில் பல இடங்களில் சிறப்பாக எதுகையும் மோனையும் அமையவில்லை என்பது அவர் முடிவாயிற்று. அவர் சொல்ல ளவில் நின்றால் போகிறார் எனவிட்டுவிடலாம். செயல் வீரராக இறங்கி விட்டார்.

66

‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு"

என்னும் முதற் குறளிலேயே எதுகை சிறப்பாக அமைய வில்லை என்று கருதினார்.