பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம்

305

தமிழை, அதே நோக்கிலும் அதே போக்கிலும் வளர்க்க வந்த தமிழ்ச்சங்கத்தை நான்காம் தமிழ்ச்சங்கம் என்று நாவாரப் பேசினர்; பாடினர்; எழுதினர்.

உக்கிர பாண்டியனார் கடைச்சங்கத்தின் இறுதியில் இருந்து சங்கம் புரந்த காவலர். அவர் பெயருடைய உக்கிர பாண்டியனார் என்னும் பாண்டித்துரையார் மறைந்த சங்கத்தைத் தோற்றுவிப்பார் போலத் தோற்றுவித்தார் என்று சங்கம் தோன்றிய நாளிலேயே புலவர்கள் புகழ்ந்து பாடினர்! போற்றி சைத்தனர்.

CC

முன்னைய

சங்கமிருந்த மதுரைமாநகரத்தின்கண் நாலாவதாக ஒரு சங்கம் நிறுவப்பட்டது கல்விமான்கள் பலர்க்கும் பெருமகிழ் தந்தது. இச்சங்கம் 'மதுரைத் தமிழ்ச் சங்கம்" எனப்படும்.

"இச்சங்கம் இரீஇயினார் பண்டைக்காலத் தண்டமிழ் வளர்த்த பாண்டியர் அனைவரும் ஓருருக் கொண்டு உதித்தாங்கு முகவையம் பதியில் அவதரித்த அரசவள்ளலும், பாலவனத்தத் தராதல மன்னருமாகிய ஸ்ரீமாந் பாண்டித்துரையவர்கள்.

46

இச்சங்கம் இருந்து தமிழாராய்வார் சங்கம் இரீஇய பாண்டித்துரைத் தேவரவர்களும் தமிழாசிரியர் இராகவ ஐயங்காரும் வேறு பல நல்லிசைப் புலவர்களுமாம்.

CC

இச்சங்கப்புலவர் இக்காலத்திற்கேற்ப நான்கு வகைப் படுவர்: தமிழ் மாத்திரையே கற்று வல்லாரும். தமிழும் ஆங்கிலமும் ஒருசேரக் கற்று வல்ாரும், தமிழும் சமஸ்கிருதமும் ஒருசேரக்கற்று வல்லாரும் சமஸ்கிருதமும் ஆங்கிலமும் ஒரு சேரக் கற்று வல்லாரும் என.

"இச்சங்கத்திற்கு நூல் தொல்காப்பியமாதி இலக்கணங் களும், சிந்தாமணியாதி இலக்கியங்களுமாய்த் தற்காலத்து வழங்கும் அத்தனை நூல்களுமாம்."

"இனி இச்சங்கத்துப் புலவர்களானே பல நூல்களும் உரைகளும் செய்யப்படும். ஆங்காங்குள்ள புலவர்பலர் இனிச் செய்யும் நூல்களும் இச்சங்கத்தின் கண்ணே வந்து அரங்கேறும்.

"இனிப் புலவராவார் இச் சங்கத்திற் பரீக்கை கொடுத்துச் சிறப்புப் பெயர் பெறுவர். நூல் செய்வாரும் உரை செய்வோரு மாம் புலவர்கட்கு இச்சங்கம் பரிசிலும் பட்டமும் அளிக்கும்.'