பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைக் கோயில் வரலாறு

17

பொன் : அவந்தி நகரில் ஒருவன் இருந்தான். அவன் தந்தை பெருஞானி. எனினும் அவனுக்கு இப் பொல்லான் மகனாகப் பிறந்தான். தன் தாய்க்குப் பேரிழிவு செய்தான்! தன் தந்தையையும் கொன்று தீர்த்தான். இறந்த தந்தையின் ஆவி, பாவிமகனைப் பற்றி அலைத்தது; அவன் பேயாய்த் திரிந்தான்; ஊர் ஊராய் அலைந்தான். மதுரைத் திருநகர்க்கு வந்த அக்கடை யனையும் கடைத் தேற்றக் கருதினான் கண்ணுதல் பெருமான். அதனால் அம்மையொடு தானும் வேட்டுவக் கோலத்தில் மாபாவி முன்னே வந்து தோன்றினான். பாவ விலங்கை வேட்டையாடி அழிக்கவல்ல பெருமான் திருப்பார்வை பட்ட அளவில், மாபாவி உள்ளம் கலங்கியது; கசிந்து உருகியது; கண்ணீர் வழிந் தோடியது; அக்கண்ணீருடன் அவன் செய்த பாவமும் கரைந் தோடியது. இறைவன் இறைவியுடன் மாபாவி முன் தோன்றிய தோற்றத்தைத்தான் சிற்பி, இவ் வழகுச் சிலைகளாக வடித்துள்ளான்.

கண்

சரி, எனக்கு இப்பொழுது இரண்டு ஐயங்கள் ஏற்படுகின்றன. ஒன்று, இத்தகைய மாபாவியின் பாவத்தையும் போக்குதல் வேண்டுமா? என்பது, மற்றொன்று, இத்தகைய காட்சியை நினைவுபடுத்தும் சிலைகளை இத் திருக்கோயிலிலே நிறுத்திவைக்க வேண்டுமா? என்பது.

பொன் : கேட்கத் தக்க வினாக்கள் இவை. இவற்றுள் ஒரு வினாவைப் பரஞ்சோதி முனிவரே எழுப்பி விடை தந்தார். இறைவி, இறைவனிடம்,

"உய்வகை இலாத பாவி

இவனுக்கென் னுய்யும் தேற்றம்

செய்வகை என்று

கேட்டாள். இறைவன்,

'விடுவகை யின்றி, வேறு

களைகணும் இன்றி, வீயக்

கடவுளைக் காப்ப தன்றோ

காப்பென்றான்.”