310
இளங்குமரனார் தமிழ்வளம்
31ஓ
குறித்தன. ஆகலின் அறுதியாய் உறுதிப்படுத்தப் பெற்ற உண்மையை ஆராய்வேம் என்பது அறத்தொடும் முறையொடும் கூடிய ஒன்று அன்றாம்!
ய
கி
இன்னும் காண்போம்: சங்கம் தோன்றிய அந்நாளில், தமிழகமெல்லாம்தழுவித் தமிழ் வளர்த்தற்கென்றே ஓரமைப்பு எங்கேனும் உண்டாகி இருந்ததோ? அவ்வமைப்பில் நாடு தழுவிய புலவர்களெல்லாம் நணுகியிருந்து தமிழாய்ந்த முறையேதும் உண்டோ? பல்கலைக் கழகந்தானும் தமிழ் மொழியைத் தன்மொழியாகச் சற்றேனும் கருத்தில் இறுத்திக் கடனாற்றிய துண்டோ? தமிழ்ப் பயிற்சியைக் கல்லூரி வகுப்புகளில் கால் வைக்க இடமுந்தந்ததுண்டோ? சிறிதே இருந்த இடத்தையும் பறித்தெறிந்து நின்ற காலையில் தடுத்து நிறுத்தத்தொடுத்து முயன்ற அமைப்பும் யாதோ? தமிழ்ப் புலவர்க்கெனப் பாடம் வகுத்தும் பாடத்திட்டப்படி கற்பிக்கும் கல்லூரியை ஏற்படுத்திப் பயில்வார்க்கு உண்டி உடை உறையுள் எல்லாம் வழங்கிக் கற்பிக்கும் முறையை எவ்வமைப்பேனும் பல்கலைக் கழகமேனும் அக்காலத்துக் கொண்டிருந்தனவோ? சங்கத்துப் புலவர்களாய் இலங்கியோரும், சங்கத்துப் புலமைத்தேர்வில் வென்றோரும், சங்கத்துக் கல்விக் குழுவிலும் ஆய்வு அரங்கிலும் இடம் பெற்றோரும், சங்கத்து நூல் நிலையம், ஏட்டுச் சுவடி இவற்றைப் பெற்றுப் திப்புப் பணி செய்தோரும், சங்கப் பேரரங்கில் தம் நூலை அரங்கேற்றம் செய்தோரும், சங்கத்து உதவிபெற்று நூல் வெளியிட்டோரும் என்பாரை யெல்லாம் ஒரு பட்டியலிட்டுப் பார்த்தால் அப்பெருந்தகையர் தொடர்பில்லாமல் அவர் வழிவழித் தொடர்பு இல்லாமல் இந்நாளில் தமிழ்ப் புலவராவோர் -பேராசிரியராவோர் முனைவராவோர் எவரேனும் இருப்பரோ? எல்லாம் தமிழ் எதிலும் தமிழ் என்பதற்கு வித்திட்ட அமைப்பு எது? விழிப்பு மிக்க இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலே தமிழால் வாழத்தோன்றிய அமைப்போ தமிழ்ச் சங்கம்?
-
அரசின் அரவணைப்பு அறவே இல்லாத அயலார் அரசில் -ஆங்கிலத்திற்கே முழுதரவணைப்பும் வட மொழிக்குத் தழுவுதலும் அமைந்த அரசில் -தமிழுக்கு உதவியை எதிர் பார்க்க முடியுமோ? பல்கலைக் கழகத்து உதவியேனும் இருந்திருக்க வேண்டும் அது, தான் செய்ய வேண்டிய பணியைச் செய்யாமல் புறக்கணித் திருக்க, அதனைச் செய்தற்கு என்று எழுந்த அமைப்பைக் கட்டிக் காத்தல் கடமை என்று! அதுவும்