பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம்

311

இல்லை. விடுதலை பெற்ற பின்னராவது பல்வேறு பொது அமைப்புகளுக்கு அரசு நன்கொடையும் உதவியும் வழங்குவது போல் உதவியதா? தமிழ்ப் பல்கலைக் கழகமாகத் தமிழ்ச்சங்கம் இயங்குதற்கு, வழிகாட்டியாக வேனும் இயங்கியதா? எல்லாம் இல்லை! எதுவும் செய்யவில்லை! ஆனால் நான்காம் சங்கந்தானா? என்று ஆராய்வதற்கு முன்வந்து சூழ்கின்றது! சங்கத்தின் வளர்ச்சிக்காக செயலாற்றுவதற்காக அரசு என்ன

செய்தது?

சங்கம் வெளியிட்ட நூல்கள் ஒன்றா? இரண்டா? சங்க ஏடுகளைப் பயன்படுத்தி ஆராய்ந்து நூல் வெளியிட்டவர் ஒருவரா?இருவரா? "நீ எங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருவாய்? நான் உங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன தருவாய்?" என்ற நிலையில் ஏடுகளைத் திரட்டி வைத்து எவருக்கும் உதவாமல் இருந்தவர்களும், இன்ன ஏடு தம்மிடம் இருக்கிறது என்பதையும் அறிவிக்கவும் விரும்பாமல் மறைத்தவர் களும் இருந்த நாட்டிலே, எந்த ஒரு சிறு பயனையும் எதிர்பாராமல் எவ்வாறேனும் பயன்பட்டால் மொழிக்கும் நாட்டுக்கும் நலமே என்ற பெருநோக்கில் எத்துணைப் பேர்களுக்கு ஏடுகள் படி யெடுத்து வழங்கப் பெற்றுள்ளன!

எட்டுத் தொகையுள் முதலாவதாகிய நற்றிணையை முதற்கண் உரையுடன் பதிப்பித்த அறிஞர் பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர்க்குச் சங்க ஏடு உதவியது.பின்னே அந்நற்றிணைக்கு விளக்கவுரை வரைந்த பேராசிரியர் ஒளவை சு. துரைசாமிப் பிள்ளைக்குச் சங்க ஏடு உதவியது. நல்ல குறுந்தொகை எனப் பாராட்டப் பெறும் குறுந்தொகையை முதற்கண் பதிப்பித்த நற்றமிழ்த் தொண்டர் திருமாளிகைச் சௌரிப் பெருமாள் அரங்கனார்க்குச் சங்க ஏடு பேருதவியாயது. அன்றியும் 316 ஆம் பாடலாகிய 'ஆய்வளை நெகிழவும்' என்பது மற்றைப் படிகளில் கிடையா தொழியச் சங்கப் படியே அதனைக் கிடைக்கச் செய்து நிறைவு தந்தது.

உ.வே. சாமிநாதையர் பதிப்பித்த புறநானூற்றுக்கும் பரிபாடலுக்கும் சங்கச்சுவடிகள் உதவின. இரா. இராகவ ஐயங்கார் பதிப்பித்த அகநானூற்றுப் பதிப்புக்கும் சங்கச் சுவடி பயன்பட்டது. வ.உ.சி. யின் தொல்காப்பியம் பொருள் இளம்பூரணர் பதிப்புக்கும், சி வை. தாமோதரம் பிள்ளையின் தொல்காப்பியம் பொருள் நச்சினார்க்கினியம் பதிப்புக்கும் சங்க ஏடுகள் துணையாயின. இவ்வாறே நற்றிணை குறுந்தொகை