பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

> மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம்

315

இயற்றும் நூல் சங்கத்தின் கொள்கைகளுக்கு ஒத்ததாய், அதன் நோக்கஙகளை நிறைவேற்றுவதாய் இருப்பதாக எண்ணினால் அந்த நூலை அவர் சங்கத்தின் பரிசோதனைக்கு அனுப்பலாம். சங்கத்தின் அறிஞரால் அந்நூல் ஒப்புக் கொள்ளப்பட்டால் அதைச் சங்கநூல் என்று சொல்லும் உரிமை அவ்வாசிரியருக்கு வழங்கப்படும். சங்கநூல்களை முறையாக வாங்குபவர்கள் என்று சங்க அங்கத்தினரின் ஒரு பகுதியினர் இருத்தல் வேண்டும். சங்கநூல்களின் பதிப்பு ஒரே வடிவத்ததாக அழகாக அடுக்கி வைப்பதற்கு இயைந்ததாக இருத்தல் வேண்டும். சங்க ஆதரவு பெற்று நூல் வெளியிடும் ஆசிரியர் ஒரு குறிப்பிட்ட தொகைப் புத்தகங்களைச் சங்க வாயிலாகச் சங்கம் குறிப்பிடும் விலைக்குச் சங்கத்தின் புத்தக அங்கத்தினருக்கு விற்க வேண்டும். இவ்வாறு நாலாம் சங்க நூல் தொகை ஒன்று இந்நாளின் போக்குக் கேற்பச் சங்கப் பண்பாடுகளுடையதாய் இலங்குதல் கூடும்" (செந்தமிழ் 54 இணைப்பு)

பாண்டித்துரைத் தேவரின் 105ஆம் ஆண்டு விழாத் தொடக்கவுரையாற்றிய டாக்டர் மெ. சுந்தரம் தமிழ்ச் சங்கத்தை Deemed University ஆக்க வேண்டும் என்னும் கருத்தை வெளியிட்டு வலியுறுத்தினார்.

"மதுரைத் தமிழ்ச் சங்கத்தை Deemed University என்று சொல்ல வாய்ப்பிருக்கிறது. சென்னையில் தக்கண பாரத இந்திப்பிரச்சாரசபை இருக்கிறது. அது இரண்டு கோடி ரூபாயில் Deemed University ஆகப் பல்கலைக்கழகத்திற்கு ணையாக இருக்கிறது. அங்குக் கொடுக்கும் பட்டத்தைப் பதினான்கு பல்கலைக்கழகங்களும் ஏற்றுக்கொள்கின்றன. Deemed University என்றால் பட்டம் கொடுக்கலாம். ஆராய்ச்சிப் பட்டம் அளிக்கலாம். அதற்கு அரசாங்கம் அனுமதி கொடுக்கிறது. மேலும் இந்திய அரசு மானியம் கொடுக்கிறது அந்த Deemed University என்பதை இந்திக்கு மட்டுமல்லாது வடமொழிக்கும் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் தமிழுக்கு இன்னும் வரவில்லை. வருவதாக இருந்தால் தமிழ்ச் சங்கத்திற்குத் தான் முதலில் வரவேண்டும். ஏனென்றால் நூல் நிலையமும், இலக்கிய இலக்கண ஆராய்ச்சியும் படிக்க வைத்துப் பட்டங் கொடுக்கிற நிலையும் இவை வைபோன்ற எல்லாத் தகுதிகளும் தமிழ்ச் சங்கத்திற்கு இருக்கின்றன. தமிழக அரசு இதற்கு ஆவன செய்தல் வேண்டும். அத்தகைய திட்டம் நடுவணரசு செய்தால் அதற்குரிய தகுதி தமிழ்ச் சங்கத்திற்கு உண்டு"