பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

கண்

ளங்குமரனார் தமிழ்வளம் - 31 31ஓ

ஆதலால், ‘எவர் துணையும் இல்லானுக்கு இறைவனே துணையாகி நின்று பாவம் தீர்த்தான்' என்பது முதல் வினாவின் விடை இனி அடுத்த வினாவுக்கு விடை சொல்வேன்.

"கோயிலுக்கு வருபவர் எத்தகைய பாவியர் எனினும், உண்மையன்பால் உருகித், தாம் செய்த பாவத்தை உணர்ந்து, திருந்தி, நல்வழிப்படுவார்களானால், அவர்களுக்கு இறைவன் திருவருள் பாலிப்பது உறுதி" என்பதை உலகோர்க்கு வெளிப்படக் காட்டுதற்கே இச் சிலைகளைத் திட்டமிட்டு வைத்தனர் என்பதாம். : நோயுள்ளவனுக்கு மருத்துவன் உதவி வேண்டுவது போலப் பாவியைக் கடைத்தேற்றவே இறைவன் அருள் புரிந்தான் என்பதால் மாந்தர்க்கு ஓர் அரிய படிப்பினை கிடைத்துள்ளது. குற்றம் குறை இல்லாத மனிதப் பிறப்பு இல்லை. ஆனால், ஒருசிறு குற்றத் தையும் பெரிதுபடுத்திப் பேரழிவு செய்பவர்கள் மிகப்பலர். தாங்கள் எக்குற்றமுமே செய்தறியாதவர் போலத் தகுதியற்ற செயல்களைச் செய்து வருத்த வாரும் பலர். இவர்கள் இறைவன் செய்த இத்திரு விளையாடலை எண்ணிப் பார்க்க வேண்டும். குற்றத்தை வெறுக்க வேண்டுமேயல்லாமல், குற்ற வாளியை வெறுத்தல் கூடாது என்பதையும் உணர வேண்டும்.உணர்ந்தால் உலகில் எத்தனையே தீமைகள் அகலும்; நன்மைகள் பெருகும்.

பொன் : நல்லது; அப்படியே ஆகட்டும். இனி நாம் அடுத்துள்ள மீனாட்சி நாயக்கர் மண்டபத்திற்குச் செல்வோம்.