பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/330

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

318

இளங்குமரனார் தமிழ்வளம் - 31

பயன்மிகு கருத்தரங்காக அது விளங்கிடவேண்டும். ஆய்வும், அதன் முடிவும் செந்தமிழ் இதழில் வெளியிடுதல் வேண்டும்.

செந்தமிழ் இதழைப் பழைய நிலையில் காணுமாறு செய்வித்தல் வேண்டும்: 1. திங்கள்தோறும் வெளிப்படுத்த வேண்டும். 2.எதைப் பற்றிய செய்தியாயினம் புதிய ஆய்வும் கண்டுபிடிப்புமுடையதாகவே அமைதல் வேண்டும். இவ்விரண்டு வகையும் செந்தமிழைப் பழைய நிலையில் பார்க்க வைக்கும் என்பது உறுதி.

நாட்டிலுள்ள தமிழமைப்புகள், சங்கங்கள் ஆகியவற்றை யெல்லாம் இணைத்தல் தமிழுக்கு ஆக்கம் செய்யும் வழிகளுள் தலையாயது. அதனைத் தமிழ்ச் சங்கமே தலைமை தாங்கி நடாத்துதல் வேண்டும். கரந்தைத் தமிழ்ச்சங்கம் கட்டாயம் கை கொடுக்கும்! பிற சங்கங்களையும் ஆர்வத்தால் இணைக்க வேண்டும். தில்லித் தமிழ்ச் சங்கம், கல்கத்தா தமிழ்ச்சங்கம், பெங்களூர் தமிழ்ச் சங்கம், ன்னவாறு வெளி மாநிலங்களில் உள்ள சங்கங்களொடும், வெளிநாட்டுத் தமிழ்ச் சங்க அமைப்புகளொடும் உணர்வு மிக்க தொடர்பைத் தமிழ்ச்சங்கம் உண்டாக்குதல் உடனடிச் செயலாகும். அச்சங்கங்களுக்குப் பேராளர் உரிமையும் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் கொடுத்தலும் ஏற்கத் தக்கது.

தமிழ்ச்சங்க

ஆண்டு விழாவை, இச்சங்கங்களின் ருங்கிணைந்த ந்த விழாவாக அமைக்கும் நல்ல காலச் சூழல் ஏற்பட்டு விடுமாயின், வெவ்வேறு இடங்களில் அவ்வமைப்பின் சார்பிலும் சங்க ஆண்டு விழா நடாத்த வாய்க்கும். அதனைச் சங்க நிறுவனர் பாண்டித்துரை அன்றே தொடங்கினார்: தஞ்சையில் தமிழ்ச் சங்க விழாவை நடாத்திக் கரந்தைத் தமிழ்ச் சங்கத் தோற்றத்திற்குக் கால்கோள் செய்தார்! அம் மரபை வழுவாமல் கடைப்பிடித்தால் நாட்டில் ஒரு பெரிய விழிப்புணர்வுக்கு வித்திட்ட பெருமை மதுரைத் தமிழ்ச் சங்கத்திற்கு உண்டாகும் என்பது உறுதி.