பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/340

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328

இளங்குமரனார் தமிழ்வளம் 31ஓ

தீர்மானம் - 17

இப்பரிக்ஷைக்கு இச்சங்கத்தாரால் ஆங்கில மாணாக்கர்க்கு நடத்தப்படும் பரீக்ஷைகளுக்கு ஏற்படுத்தப்பட்ட இடங்களோடு கொழும்பும் யாழ்ப்பாணமும்

ஸ்தலங்களாகும்

தீர்மானம் - 18

பரீக்ஷை

இப்பரீக்ஷை ஒவ்வோர் ஆண்டிலும் தை மீ 2-வது திங்கட்கிழமை தொடங்கி முதல் மூன்று நாள் நடத்தல் வேண்டும்.

தீர்மானம் 19

-

இப்பரீக்ஷைக்குப் பரீக்ஷகர்களை வருஷோத்சவ காலத்தில்

தீர்மானம் செய்யவேண்டும்.

13, 14, 15, 16, 17, 18, 19 தீர்மானங்கள் எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டன.

தீர்மானம் 20

தமிழ் அபிவிருத்தியின் பொருட்டு வேறு இடங்களிலுள்ள சங்கங்களையும் அடியிற் குறித்த நிபந்தனைகளுக்குட்பட்டு

ச்சங்கத்தின் கிளைச்சங்கங்களாக

கொள்ளல் வேண்டும்.

நிபந்தனைகளாவன:

அங்கீகரித்துக்

(1) அக்கிளைச் சங்கத்தார், தமிழ்ப் பாஷாபிவிருத்தியின் பொருட்டு அதற்கு வேண்டிய முறைகளை மதுரைத் தமிழ்ச் சங்கத்தாரின் நோக்கப்படி நிறைவேற்றுதல் வேண்டும்.

(2) தமிழ் அபிவிருத்தியின் பொருட்டு வேண்டும் பொருளுக்குப் பல்லோரிடமிருந்தும் தொகை சேகரித்தனுப்பல் வேண்டும்.

(3) அவ்வாறு சேகரமாகும் தொகையில் 100க்கு 75 மூலசங்கத்துக்கு அனுப்பல் வேண்டும். அச்சங்கங்களுக்கு வேண்டிய உதவிகளை மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் யுக்தப் படியும் சௌகரியப் படியும் செய்வார்கள்.

(4) அச்சங்கத்தார் பல இடங்களிலுஞ் சென்று ஏடுகள் தேடி மூலசங்கத்துக்கு அனுப்பல் வேண்டும்.