பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம்

(5) கிளைப்புத்தக சாலைகள் ஏற்படுத்தல் வேண்டும்.

329

(6) மதுரைத் தமிழ்ச் சங்கத்திற் பிரசுரமாகும் பத்திரிகை புத்தகங்கள் முதலிய பிரசுரங்கள் எல்லாவற்றிலும் இரண்டு பிரதிகள் விலையின்றிக் கிளைச்சங்கத்துக்கு அனுப்பப் படல் வேண்டும்.

(7) அச்சங்கத்தின் வருவாய் முதலிய கணக்குகள் ரிப்போட்டுகள் முதலிய எல்லாவற்றையும் மதுரைத் தமிழ்ச் சங்க அக்ராசனாதிபதி அவர்களுக்கு முதலில் அனுப்பல் வேண்டும். அக்கிராசனாதிபதியவர்களும் காரியதரிசியவர்களும் ஏனை மூன்று அங்கத்தினரும் சேர்ந்து அக்கிளைச் சங்கங்களை அங்கீகாரம் செய்தல் வேண்டும்.

மேற்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டுத் திருநெல்வேலி சரஸ்வதி விலாசசபையை இச்சங்கத்தின் கிளைச்சங்கமாக அங்கீகாரம் செய்யவேண்டும்.

பிரேரேபகர் - மகா-ள-ள-ஸ்ரீ எஸ். பால்வண்ண முதலியார்

அவர்கள்

ஆமோதித்தவர் "சவரிராயபிள்ளை அவர்கள்

ஆதரித்தவர் "சேற்றூர்ச் சுப்பிரமணியக் கவிராயர்

அவர்கள்”

எல்லோராலும் ஏகமனதாய் அங்கீகரிக்கப்பட்டது.

செந்தமிழ்ப்

தீர்மானம் - 20

பத்திரிகைக்கு

விஷயதானம்

செய்பவர்களுக்குப் பாரம் (Form) ஒன்றுக்கு ரூ 4 வீதம் கூடுந்தொகையைப் பத்திரத் தொகுதி முடிவிற் சங்கத்தினின்று கொடுக்க வேண்டும்.

பிரேரேபகர் - மகா-ள-ள-ஸ்ரீ அக்கிராசனாதிபதி அவர்கள் ஆமோதித்தவர் "நா. கதிரைவேற்பிள்ளை அவர்கள்" எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டது.

தீர்மானம் - 22

புத்தக விற்பனைக்காக இச்சங்கத்துக்கு ஒரு புத்தகசாலை (Depot) ஏற்படுத்தப்படல் வேண்டும்.