பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

கண்

இளங்குமரனார் தமிழ்வளம் 31

பொன் : உனக்கு இப்பொழுது என்ன விரிவு தோன்றிவிட்டது? : விரிவா? அட்டசத்தி மண்டபத்தைக் கட்டியவர், திருமலை மன்னர் பட்டத்துத் தேவியர். இதனைக் கட்டியவர், ஓர் அரச அலுவலர் பார்த்தாயா? அரசர் களே செய்யட்டும்; அமைச்சர்களே செய்யட்டும்; அவரே செய்யட்டும் இவரே செய்யட்டும் என்று தட்டிக்கழிக்காமல் திருப்பணிகளை எவரும் போட்டி போட்டுக்கொண்டு செய்துள்ளார்கள். 'நல்ல பணியில் நமக்கும் பங்கு வேண்டும்' என்ற உந்துதல்தானே இப்படிச் செய்ய ஏவி இருக்கிறது! இந்த உணர்வு சமுதாய நலச் செயல்களுக்கு இக் காலத்தில் ஏற்படு மானால் இவ்வுலகம் இன்ப உலகமாக ஒரு நொடிப் பொழுதளவில் மாறிவிடாதா?

பொன் : ஆமாம்! ஆமாம்! இப்படி எண்ணவேண்டும். எண்ணி யதைச் செயலுக்குக் கொண்டுவரவேண்டும். இப்படி எண்ணுபவர்களெல்லாம் செயலில் இறங்கியிருந் தால் எவ்வளவோ நலங்கள் ஏற்பட்டிருக்கும். 'நாம் செய்து காட்டுவோம்' என்று நான்குபேர் துணிந்து இறங்கினால் நாற்பதுபேர் கைகொடுக்க வந்திருப்பர்! ஆனால் அந்த நான்கு பேர்க்குத் துணிவு வர வேண்டுமே! நல்லது; அடுத்துள்ள மண்டபத்திற்குச் செல்லுமுன் இத் திருவாயிலைப் பார். இத் திருவாயிலுக்கு அழகு செய்யும் எடுப்பான திருவாச்சியைப் பார். இதன் உயரம் 75 மீட்டர். இதிலுள்ள விளக்குகள் 1008. இந்திய நாட்டு விடுதலைக்குத் தம் வாழ்வைச் சுடராக்கி எரித்தனரே அந்த மருதுபாண்டியர். இத்திரு வாச்சியைத் திருவாயிலில் அமைத்துச் 'சோதியே சுடரே என்று அம்மையப்பரைப் பாடிப்பரவி யுள்ளனர். பித்தளையால் அமைந்த இத்திருவாச்சி இப் பொழுதும் சிவகங்கை அரசின் அற நிலையத்தார் கண்காணிப்பில் ஒளி செய்து வருகின்றது! நான் சொல்வது புரிகிறதா? என்ன சிந்திக்கிறாய்?

கண்

1008 திருவிளக்குகளை எண்ணினேன். சிவத் திருக் கோயில்கள் 1008 என்பர். அவ்வாயிரத்து எட்டுத் திருக்கோயிலுக்கும் ஒருங்கே விளக்கேற்றிய பேற்றை இங்கேயே அடைவதற்கு அச்சிவகங்கைச் செம்மல்கள்